• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 - அரசின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக பெண்கள் கருத்து

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 - அரசின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக பெண்கள் கருத்து

ரேஷன்கார்டு

ரேஷன்கார்டு

குடும்பத்தலைவர் பெயர் மாற்றம் செய்ய தேவை இல்லை என்ற அறிவிப்புக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

  • Share this:
தகுதியுள்ளவர்களுக்கு உரிமைத்தொகை என தமிழக அரசின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக கருத்து கூறியுள்ள பெண்கள், அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட ரூ1000 உரிமைத்தொகை தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அது, தங்களுக்கு ஏமாற்றத்தினை அளித்துள்ளதாக குடும்பதலைவிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி அனைத்து குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ரேஷன் ஸ்மார்ட் கார்டில் குடும்பத்தலைவர் பெயர் மாற்றம் தேவையில்லை என்ற அறிவிப்பு, நியூஸ் 18 செய்தியில் கூறப்பட்டதை தொடர்ந்து அரசு விளக்கம் அளித்துள்ளதாக பொதுமக்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சியினர் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தாலும், அனைவரின் கவனத்தினை ஈர்த்தது குடும்பதலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத்தொகை வழங்கும் வாக்குறுதி தான். இதனை திமுக, அதிமுக, மக்கள் நீதிமய்யம் கட்சிகள் அறிவித்தன. திமுக மாதம் தோறும் ரூ 1000 மற்றும் அதிமுக மாதம் தோறும் ரூ 1500 என்று அறிவித்தன.

தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், நகர பஸ்களில் மகளிர் பயணம் செய்யம் இலவசம் என்ற திட்டத்தினை அறிவித்தது. இதனை பெண்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், குடும்பத்தலைவிகளுக்கான மாதந்திர உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடையே அதிகாரித்தது. அது மட்டுமின்றி இந்த திட்டம் குறித்து பல்வேறு ஆதராமில்லாத செய்திகளும் சமூக வலைதளங்களில் உலா வர தொடங்கின.

அதில் குடும்பதலைவர் இடத்தில் பெண்கள் படம் இருக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள 5 வகை ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளில் சில குறிப்பிட்ட கார்டுகளுக்கு தான் வழங்கப்படும் என்று செய்திகள் வர தொடங்கியதால் குடும்பத்தலைவர் படத்தினை மாற்றவும், ரேஷனர் கார்டு வகையை மாற்றவும் தமிழகம் முழுவதும் தாலூகா அலுவலகத்தில் வட்டவழங்கல் பிரிவு மற்றும் ஆன்லைனில் பதிவு செய்ய இசேவை மையம், தனியார் இன்டர்நெட் மையங்களில் மக்கள் குவிந்தனர். இதனால் ஒவ்வொரு வட்ட வழங்கல் அலுவலகத்திலும் இது தொடர்பான விண்ணப்பங்களும் நாளுக்கு நாள் குவிந்தன. இந்த பிரச்சினை தொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சியில் விரிவாக எடுத்து கூறப்பட்டது மட்டுமின்றி, இத்திட்டம் குறித்து அரசு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

TN Budget 2021


இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில், கடந்த வெள்ளிக் கிழமை அறிக்கப்பட் பட்ஜெட்டில் குடும்பதலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை ஏழைக்களுக்கான திட்டம், வல்லுநர்களுடன் ஆலோசித்து தகுதியான அளவுகோல்களை அரசு வகுத்து வருவதாகவம், தகுதியான குடும்பங்களை கண்டறிந்த பிறகு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், உரிமைத்தொகை பெற ரேஷன் அட்டைகளில் குடும்பத்தலைவர் பெயர் மாற்றம் செய்ய தேவை இல்லை என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

குடும்பத்தலைவர் பெயர் மாற்றம் செய்ய தேவை இல்லை என்ற அறிவிப்பு மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ள போதிலும், தகுதியான குடும்பங்களுக்கு என்ற அறிவிப்பு குடும்பத்தலைவிகள் இடையே பெரும் அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து குடும்பதலைவிக்கும் மாதம் தோறும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தேர்தலின் போது அறிவித்துவிட்டு தற்பொழுது தகுதியான குடும்பங்கள் என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளது தங்களுக்கு ஏமாற்றித்தினை அளித்துள்ளதாக குடும்பத்தலைவிகள் தெரிவித்துள்ளனர்.

கோவில்பட்டியை சேர்ந்த பார்வதி என்ற குடும்பதலைவி கூறுகையில், எல்லோரும் தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து குடும்பதலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 தருவதாக கூறினார். எந்த சின்ன ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றாலும் குடும்பத்தில் உள்ள ஆண்களை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த மாத தொகை கொடுத்தால் குடும்பத்தலைவிகளுக்கு நல்லது என்று நினைத்தோம், ஆகையால் அனைவருக்கும் அரசு கொடுக்க வேண்டும், தேர்தலில் சொன்ன வாக்குறுதியை மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என்கிறார்.

பழனிவேல் தியாகராஜன்


கன்னியகுமாரியை சேர்ந்த ஆனந்தலெட்சுமி தேர்தலின் போது அனைத்து ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்பதலைவிகளுக்கு மாதம் தோறும் உதவி தொகை வழங்கப்பட்டும் என்று கூறினார்கள். ஆனால் தற்பொழுது தகுதியானவர்களுக்கு என்று கூறுவது பெண்களை ஏமாற்றுவதாக உள்ளது. கொரோனா நிவாரண தொகை ரூ 4 ஆயிரம் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கு வழங்கப்பட்டது போன்று மாத உதவிதொகை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றார்.

கன்னியாகுமரியை சேர்ந்த ப்ரீதி கூறும் போது சட்டமன்ற தேர்தலில் திமுக பல வாக்குறுதிகளை தந்தது, அதிலும் குடும்பதலைவிக்கு மாதம் தோறும் ரூ 1000ம் வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. ஆனால் தற்பொழுது தகுதியுள்ளவர்கள் என்று தெரிவித்து இருப்பது இல்லதரசிகளை ஏமாற்றும் செயல் என்று தெரிவித்தார்.

தமிழக அரசின் அறிவிப்பு குறித்து கோவில்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், தேர்தலின் போது கொடுத்து வாக்குறுதிகளில் பெண்களை கவர்ந்தது மாதம் தோறும் வழங்கப்படும் என்று அறிவித்த உரிமைத்தொகை தான். திமுக ஆட்சிக்கு வந்ததும் ரூ 1000ம் வழங்கப்படும் என்று எதிர்ப்பார்த்து பலரும் ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளில் ஆண்கள் புகைப்படத்தினை எடுத்து பெண்கள் புகைப்படத்தினை வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Must Read : குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000: ரேஷன் அட்டையில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை - நிதியமைச்சர்

இப்பிரச்சினை குறித்து தெளிவாக நியூஸ் 18 செய்தி வெளியிட்டது. செய்தியில் தெரிவித்து போன்று புகைப்படம் தொடர்பாக அரசு தெளிவான விளக்கத்தினை கொடுத்துள்ளது. ஏழை மற்றும் வறுமைக்கோட்டிற்குள் உள்ளவர்களுக்கு திட்டமாக உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் தமிழகத்தில் வசதி படைத்தவர்கள் தான் வறுமைக்கோட்டு பட்டியில் உள்ளனர். எனவே வறுமைக்கோட்டு பட்டியை மறு ஆய்வு செய்து அதன் அடிப்படையில் வழங்க வேண்டும், இருப்பினும் அனைத்து ரேஷன் கார்டில் உள்ள குடும்பத்தலைவிக்கு வழங்கினால் மகிழ்ச்சி, அரசு நிதிநிலையை கருத்தில் கொண்டு நல்ல முடிவினை எடுப்பார்கள் என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: