நவம்பர் 23 முதல் பெண்கள், குழந்தைகளுக்கு மின்சார ரயிலில் செல்ல அனுமதி

நான் பீக் அவர் எனப்படும் கூட்டம் அதிகமில்லாத நேரங்களில் பெண்கள் பயணிக்க அனுமதி தரப்பட்டுள்ளது.

நவம்பர் 23 முதல் பெண்கள், குழந்தைகளுக்கு மின்சார ரயிலில் செல்ல அனுமதி
கோப்பு படம்
  • News18 Tamil
  • Last Updated: November 22, 2020, 10:17 AM IST
  • Share this:
சென்னையில் அத்தியாவசியப் பணியாளர்களுக்காக இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில், நாளை முதல் பெண்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தற்போது ஒவ்வொரு கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வழக்கமான பயணிகள் மின்சார ரயில்கள் இயக்கப்படவில்லை. இருப்பினும், ரயில்வே ஊழியர்கள், வங்கிகள், காப்பீடு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், அத்தியாவசிய பணிக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் பயணம் செய்ய வசதியாக செங்கல்பட்டு, அரக்கோணம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை கடற்கரை, சென்ட்ரலுக்கு தினமும் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் தற்போது 244 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.  இதற்கிடையே, இந்த சிறப்பு ரயில்களில் வரும் 23-ம் தேதி முதல்  பெண் பயணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நான் பீக் அவர் எனப்படும் கூட்டம் அதிகமில்லாத நேரங்களில் பெண்கள் பயணிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. காலையில் ரயில் சேவை தொடங்கியதில் இருந்து 7 மணி வரையும், அதன்பின்னர் 10 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரையும், இரவு 7.30 மணியில் இருந்து ரயில் சேவை முடியும் வரையும் பயணிக்கலாம்.


திங்கள் முதல் சனி வரை, நான் பீக் அவர்-களில் பெண்கள் பயணிக்க அனுமதி அளித்துள்ள தெற்கு ரயில்வே, ஞாயிற்றுக்கிழமைகளில் எந்நேரமும் பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. 12 வயது வரையுள்ள குழந்தைகள், சிறுவர் சிறுமியரை பெண்கள் தங்களுடன் அழைத்துச் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading