விலைமாதராக சித்தரித்த டிக் டாக் வீடியோ - மதுரையில் குடும்ப பெண்களுக்கு நேர்ந்த அவலநிலை

விலைமாதராக சித்தரித்த டிக் டாக் வீடியோ - மதுரையில் குடும்ப பெண்களுக்கு நேர்ந்த அவலநிலை
டிக் - டாக்
  • Share this:
டிக் டாக்கில் நடிப்புத்திறமையை காட்டிய இரு தோழிகளை, விலைமாதர்களாக சித்தரித்து அதே டிக்டாக்கில் பரப்பியதால், தோழிகளில் ஒருவர் குடும்பத்தை பிரிந்து வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மதுரை, ஒத்தக்கடையைச் சேர்ந்த தோழிகள் இருவர், டிக் டாக்கில் தோன்றி தங்கள் நடிப்புத்திறமையை வெளிக்காட்டி வந்தனர். இருவருக்கும் திருமணமான நிலையில் டிக் டாக் செயலிக்கு அடிமையானதால் அவ்வப்போது பல்வேறு வீடியோக்களை டிக் டாக் செயலியில் பதிவிட்டு பலரின் வரவேற்பைப் பெற்றனர்.

இந்நிலையில், அந்த பெண்ணிற்கு டிக்டாக் மூலம் தேனியைச் சேர்ந்த சுகந்தி என்ற பெண்ணின் நட்பு கிடைத்துள்ளது. அந்த பெண், தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக வீடியோ அடுத்து அதை டிக் டாக்கில் பதிவிட்டு வந்தார். ஒரு கட்டத்தில் சுகந்திக்கும் மதுரை பெண்ணிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு டிக் டாக் செயலியில் நட்பை துண்டித்து கொண்டனர்.


இதனால் ஆத்திரம் அடைந்த சுகந்தி, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து மதுரை தோழிகளின் டிக் டாக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்துள்ளார். பின்னர், இருவரையும் விலை மாதர்களாக சித்தரித்து டிக் டாக் செயலியில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே டிக் டாக்கில் பிரபலமான தோழிகளின் சித்தரிக்கப்பட்ட வீடியோ வேகமாக வைரலாகத் தொடங்கியது.

இதனால் தோழிகள் தங்கள் குடும்பங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கத் தொடங்கினர். தோழிகளில் ஒருவர் வீட்டை விட்டு விரட்டப்பட்டார். இதை அடுத்து அவர் காப்பகத்தில் தங்கியுள்ளார். நிலைமை கைமீறி போனதை உணர்ந்த தோழிகள் இருவரும் தங்களை விலைமாதர்களாக சித்தரித்து வெளியிட்டிருக்கும் வீடியோக்களை நீக்கக் கோரியும், வீடியோ வெளியிட்ட சுகந்தி அவரது ஆண் நண்பர் மதுரை செல்வா மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதை அடுத்து தேனியைச் சேர்ந்த சுகந்தி மற்றும் மதுரை செல்வா ஆகியோர் மீது ஒத்தக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து சுகந்தியிடம் விசாரணை நடத்தினர். அவர் ஏற்கெனவே முன்ஜாமின் பெற்றிருந்ததால், அவரிடமிருந்த செல்போன்களைப் பறிமுதல் செய்த போலீசார், டிக் டாக்கில் வீடியோ வெளியிட ஓராண்டு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.டிக் டாக்கில் வெளியிட்ட வீடியோவை பதிவிறக்கம் செய்து, அதே டிக் டாக்கில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவேற்றம் செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also see:
First published: November 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading