ஆன்லைன் உணவு டெலிவரி செய்வதுபோல கஞ்சா விற்பனை செய்த பெண் கைது.. 3 கிலோ கஞ்சா பறிமுதல்..

கால் டாக்சி டிரைவராக செல்லும் போது வனிதாவிற்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கஞ்சா சப்ளை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது. 

ஆன்லைன் உணவு டெலிவரி செய்வதுபோல கஞ்சா விற்பனை செய்த பெண் கைது.. 3 கிலோ கஞ்சா பறிமுதல்..
கஞ்சா விற்பனை
  • Share this:
வாகனத்தில்  உணவு டெலிவரி சப்ளை செய்வதுபோல கஞ்சா விற்பனை செய்த பெண்ணை கிண்டி பகுதியில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கிண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் கடத்தி வந்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் கிண்டி வேளச்சேரி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக அந்த வழியே  இருசக்கர வாகனத்தில்  உணவு டெலிவரி சப்ளை செய்ய வந்த ஒரு பெண்ணை மடக்கி சோதனை செய்துள்ளனர். உணவு டெலிவரி செய்யும் பையை சோதனை செய்த போது அதில் சுமார் 3 கிலோ கஞ்சா இருந்துள்ளது. இதனால் அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.


விசாரணையில் மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த 32 வயதான வனிதா என்பது தெரியவந்தது. மேலும் வனிதா, பகுதி நேர கால் டாக்சி டிரைவராகவும், பிரபல உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது கால் டாக்சி டிரைவராக செல்லும் போது வனிதாவிற்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கஞ்சா சப்ளை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.
கோயம்பேடு பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வந்ததாகவும் இதே போல் கிண்டியில் சப்ளை செய்ய கொண்டு போகும் போது சிக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்தது

மேலும் உணவு டெலிவரி செய்வதுபோல் கஞ்சாவை மறைத்து கொண்டு போனால் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்கும் என  எண்ணி கொண்டுபோனதாகவும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 2 செல்போன்கள், 500ரூபாய் பணம் மற்றும் 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
First published: August 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading