கோவை ரத்தினபுரி பகுதியில் காதலர் தினத்திற்கு கிப்ட் வாங்குவது போல் நடித்து பேன்ஸிகடையில் புகுந்து நகையை பறித்த பெண்ணுடன் முடிந்த வரை போராடியதாக கடை உரிமையாளர் செல்வராணி தெரிவித்தார்.
கோவை ரத்தினபுரி ஏழாவது வீதியில் சண்முகா பேன்ஸி என்ற கடை நடத்தி வருபவர் செல்வராணி. இவரது கடைக்கு நேற்று பிற்பகல் வந்த பெண் ஒருவர் கடையில் காதலர் தினத்திற்கு வழங்க கிப்ட் பொருட்கள் வேண்டும் என கூறி சில பொருட்களை வாங்கியுள்ளார்.
அப்போது பொருட்களை கடை உரிமையாளர் செல்வராணி எடுத்து பேக்கிங் செய்து கொண்டு இருந்த போது, கிப்ட் வாங்க வந்த பெண் தனது பையில் மறைத்து வைத்திருந்த, கரப்பான்பூச்சியை கொல்லும் ஹிட் (Hit Spray) ஸ்பிரேவை எடுத்து வயதான பெண்ணின் முகத்தில் அடித்தார். அதில் மயக்கமடையாத செல்வராணி கூச்சலிடவே, அவரை கீழே தள்ளி விட்டு செல்வராணி கழுத்தில் அணிந்து இருந்த 7.5 சவரன் நகையை பறித்து விட்டு அந்த பெண் தப்பிஓடினார். செல்வராணியும் விடாமல் அவரை பின் தொடர்ந்து ஓடினார்.
Also read: ஆன்லைன் மூலம் கடன் பெற்றுத் தருவதாக கூறி சக ஊழியர்களிடம் பண மோசடி.. கரூர் வாலிபர் கைது!
இந்நிலையில் தப்பியோடிய அந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து ரத்தினபுரி போலீசாரிடம் ஓப்படைத்தனர். கிப்ட்டை பேக்கிங் செய்து கொண்டு இருந்த போது அருகில் வந்த பெண் ஸ்பிரை எடுத்து முகத்தில் அடித்ததாகவும் ஆனால் முடிந்த அளவிற்கு அந்த பெண்ணுடன் போராடியதாகவும் கடை உரிமையாளர் செல்வராணி தெரிவித்தார்.
இதனிடைய பிடிபட்ட பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது அந்த பெண்ணின் பெயர் தெய்வந்தி என்கிற தமிழ்மணி என்பதும் மதுரை மேலூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. சிறிது நாட்களாக அதே பகுதியில் இந்த பெண் தங்கி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்த ரத்தினபுரி காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே கடைக்குள் புகுந்துவயதான பெண்ணின் முகத்தில் பூச்சிமருந்தை அடித்து விட்டு, வயதான பெண்மணியை தாக்குவதும், கடையில் இருந்து தப்பி ஒடுவதும் சிசிடிவி காட்சிகளில் பதிவானது. அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.