108 ஆம்புலன்ஸில் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்: செவிலியர், ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு!

ஆம்புலன்ஸின் பிரசவம்

ஆம்புலன்ஸில் இருந்த செவிலியர் உமா மகேஸ்வரி, வலியால் துடித்த முத்துலட்சுமிக்கு  பிரசவம் பார்க்க முடிவு செய்து பிரசவம் பார்த்துள்ளார்.

 • Share this:
  108 ஆம்புலன்ஸில் சென்று கொண்டு இருந்த போதே கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

  விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ்-க்கு போன் செய்து உள்ளனர்.  அருகே சிவகங்கை மாவட்டம் பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் சென்று உள்ளது.

  உடனடியாக முத்து லட்சுமியை ஏற்றிக் கொண்டு திருப்புவனம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  சென்று விடாலம் என்ற எண்ணிய ஆம்புலனஸ் டிரைவர் மணிகண்டன்,முத்துலட்சுமிக்கு பிரசவ வலி அதிமாக இருந்ததால் மதுரை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார்.

  Also read:   1978ம் ஆண்டு முதல் அரசுக்கு வாடகை பாக்கி.. RTI மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

  மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், தேசிய நெடுஞ்சாலையில் தட்டான்குளம் என்ற இடத்தில் 108ஆம்புலனஸ் செல்லும் போது  அந்த ஆம்புலன்ஸில் இருந்த செவிலியர் உமா மகேஸ்வரி வலியால் துடித்த முத்துலட்சுமிக்கு  பிரசவம் பார்க்க முடிவு செய்து பிரசவம் பார்த்துள்ளார். இந்த திடீர் பிரசவத்தில் முத்துலட்சுமிக்கு இரட்டை பெண் குழந்தை  பிறந்தது .

  பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தாயும்,  இரு பெண் குழந்தகளும் நலமுடன் உள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் கொரோனா கால கட்டத்தில் எந்த கர்பிணிகளுக்கும் கோவிட் டெஸ்ட் எடுத்த பிறகே மருத்துவமனைகளில் அனுமதிப்பது வழக்கம்.ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணையும், இரு குழந்தைகளையும் காப்பாற்றிய டிரைவர் மனிகண்டன், செவிலியர் உமா மகேஸ்வரியை அனைவரும் பாரட்டினர்.

  மானாமதுரை செய்தியாளர் சிதம்பரம்
  Published by:Arun
  First published: