முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சர்கார் பட விஜய் பாணியில் அதிகாரிகளிடம் நீண்ட நேரம் போராடி டெண்டர் வாக்களித்த பெண்!

சர்கார் பட விஜய் பாணியில் அதிகாரிகளிடம் நீண்ட நேரம் போராடி டெண்டர் வாக்களித்த பெண்!

சர்க்கார் திரைப்படத்தில் நடிகர் விஜய் வாக்கை வேறொருவர் அளித்துவிடுவார். இதனால் விஜய் பேராடி தேர்தல் விதிமுறைகள் பிரிவு 49 ‘பி’ படி டெண்டர் வாக்களிப்பார்.

  • Last Updated :

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சர்கார் படத்தை போன்று காரைக்குடியில் அதிகாரிகளுடன் நீண்டநேரம் போராடி, பெண் ஒருவர் டெண்டர் வாக்கு அளித்துள்ளார்.

காரைக்குடி நகராட்சியில் 33-வது வார்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 7 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு ஒரே வார்டில் 3,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பதால் பாரதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

பெண்களுக்கான வாக்குச்சாவடியில் அரியமுத்து மனைவி அம்பிகா என்பவர் வாக்களிக்க சென்றார். ஆனால் அவரது வாக்கை ஏற்கனவே ஒருவர் அளித்துவிட்டதாக வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அம்பிகா வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க: பூத் மாறி ஓட்டு போட சென்ற பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்

சர்க்கார் திரைப்படத்தில் நடிகர் விஜய் வாக்கை வேறொருவர் அளித்துவிடுவார். இதனால் விஜய் பேராடி தேர்தல் விதிமுறைகள் பிரிவு 49 ‘பி’ படி டெண்டர் வாக்களிப்பார். அதேபோன்று நீண்ட போராட்டத்திற்கு பிறகு, டெண்டர் வாக்களிக்க அம்பிகாவை அதிகாரிகள் அனுமதித்தனர்.

தொடர்ந்து டெண்டர் ஓட்டுப் படிவம் (17 ‘பி’ படிவம்) கொடுக்கப்பட்டு, அவர் வாக்களித்ததும், அதனை பெற்று வாக்குச்சாவடி அலுவலர்கள் தனி உறையில் வைத்து ‘சீல்’ வைத்தனர். இப்பிரச்சினையால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Local Body Election 2022, Sarkar movie