ஐயப்பன்தாங்களில் மருத்துவ முகாமில் கலந்துக்கொண்ட பெண் அமைச்சரின் காலில் விழுந்து கதறி அழுது வேலைக்கேட்டார் சம்பவம் நடந்துள்ளது.
சென்னை அடுத்த ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்த மருத்துவ முகாமை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார். அங்கு வசிக்கும் பொதுமக்கள் கண், தோல், நரம்பியல், சர்க்கரை வியாதி உள்ளிட்ட அனைத்து விதமான உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.
அப்போது அங்கு வந்த கன்னிகாஸ்ரீ (38) என்ற பெண் ஒருவர் திடீரென அமைச்சரின் காலில் விழுந்து தனக்கு இரண்டு மகள்கள் என்றும் தான் ஆதரவற்ற நிலையில் இருக்கிறேன். தனக்கு அரசு வேலை வாங்கித் தர வேண்டுமென்றும் அரசு வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்து உள்ளதாகவும் அரசு வேலை கேட்டு அனுகினால் அதிக அளவில் பணம் கேட்கிறார்கள் எனவும் ஆதரவற்ற நிலையில் இரண்டு பெண்களுடன் இருக்கும் தனக்கு அரசு வேலை வாங்கித் தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
மனுவை பெற்று கொண்ட அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அரசு வேலைக்காக கண்ணீர் மல்க பெண் ஒருவர் அமைச்சரின் காலில் விழுந்து கதறி அழுது வேலை கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர்: பார்த்தசாரதி
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.