ஃபேஸ்புக்கில் பழக்கமான பல ஆண்களை திருமணம் செய்துகொண்டு மோசடி செய்த பெண்

Youtube Video

ஃபேஸ்புக்கில் பழக்கமான பல ஆண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களிடமிருந்து நகை, பணத்தை திருடிக் கொண்டு தப்பிய புகாரில் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றவர்.

 • Share this:
  மயிலாடுதுறை அடுத்த மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரான பாலகுருவிடம், மீரா என்ற பெயரில் ஒரு பெண் முகநூலில் அறிமுகமாகி உள்ளார். 6 மாதங்களாக நீடித்த நட்பு காதலாக மாறிய நிலையில் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மீராவை பாலகுரு திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு சில நாட்களில் அந்த பெண்ணின் உண்மையான பெயர் மீரா இல்லை, ரஜபுநிஷா என்பது பாலகுருவுக்கு தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி பாலகுரு வெளியூருக்கு செல்லும் போதெல்லாம் வேறு ஒரு ஆண் ரஜபுநிஷாவை சந்தித்து செல்வதாக அக்கம்பக்கத்தினர் பாலகுருவிடம் தெரிவித்துள்ளனர்.

  சந்தேகமடைந்த அவர், மனைவியின் செல்போனை ஆய்வு செய்தபோது, அவருக்கு ஏற்கெனவே, மேட்டுப்பாளையத்தில் இரு இளைஞர்களுடனும்,மயிலாடுதுறையில் உமேஷ் என்ற இளைஞருடனும் திருமணம் நடந்திருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி மேலும் பலஇளைஞர்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.

  இது தொடர்பாக பாலகுரு கண்டித்தததால் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற ரஜபுநிஷா திரும்பி வரவில்லை. வீட்டிலிருந்து போகும் போது தங்க செயின் மற்றும் 70,000 ரூபாய் பணத்தையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிய ரஜபுநிஷா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் பாலகுரு புகார் அளித்துள்ளார்.

  மேலும் படிக்க... தூத்துக்குடியில் லோடு ஆட்டோ விபத்தில் 5 பெண்கள் உயிரிழப்பு..

  திண்டுக்கல்லில் பார்த்திபன் என்ற இளைஞருடன் ரஜபுநிஷா தற்போது தனது புதிய வாழ்க்கையை துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: