ஜெயலலிதா போல் உடையணிந்து அமைச்சர் பெஞ்சமினுடன் வாக்கு சேகரித்த பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு

ஜெயலலிதா போல் உடையணிந்து அமைச்சர் பெஞ்சமினுடன் வாக்கு சேகரித்த பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு

ஜெயலலிதாபோல் வேடமணிந்து பிரச்சாரம் செய்த பெண்

திருநங்கைகள் ஆசீர்வதித்து கொடுத்த பணத்தை வாங்கி அமைச்சர் பென்ஜமின் தனது சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

 • Share this:
  மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பென்ஜமின் பிரச்சாரம் செய்தார்.  அப்போது, ஜெயலலிதா போல் வந்து வாக்கு சேகரித்த பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  தமிழக 2021 சட்டமன்ற தேர்தலில்,  மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் பென்ஜமினுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து  மதுரவாயல் 144 வது வார்டு க்கு உட்பபட்ட  பகுதிகளில் திறந்த வேனில் கூட்டணி கட்சியினருடன் திரளாக  சென்று இரட்டை இலை சின்னத்திற்கு  வாக்கு சேகரித்தார்.

  அப்போது பெண்கள் ஏராளமானோர் ஆரத்தி எடுத்தும் தேங்காய் சுற்றி திருஷ்டி கழித்தும் வரவேற்றனர்.  மேலும், அப்பகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சரை திருநங்கைகள் கை குலுக்கி வரவேற்றனர். பின்னர் திருநங்கைகள் ஆசீர்வதித்து கொடுத்த பணத்தை வாங்கி அமைச்சர் பென்ஜமின் தனது சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

  பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா போல் உடை அணிந்த  வந்த பெண் அமைச்சர் பென்ஜமினுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அந்த பெண்ணைப் பார்த்த அதிமுகவினரை நெகிழ்ச்சி அடைந்தனர். அந்த பெண்ணுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள்  உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  Must Read : நேருக்கு நேர் சந்தித்த அதிமுக-அமமுக வேட்பாளர்கள்: ‘அண்ணா...’ ‘தம்பி...’ பாசமழை

   

  இந்நிலையில், அதிமுக மகளிர் அணியினர் மேளதாளத்திற்கு ஏற்ப  சாலையில் நடனம் ஆடி வாக்கு சேரிப்பில் ஈடுப்படடனர். இதில் பகுதி செலாளர் தேவதாஸ், வட்டசெயலாளர்கள் பாரத், தென்றல் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
  Published by:Suresh V
  First published: