ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முதியவரின் ஸ்கூட்டரை லாவகமாக திருடிய ’ஹெல்மெட்’ பெண்... சிசிடிவி காட்சி

முதியவரின் ஸ்கூட்டரை லாவகமாக திருடிய ’ஹெல்மெட்’ பெண்... சிசிடிவி காட்சி

பைக்கை லாவகமாக திருடிய பெண்

பைக்கை லாவகமாக திருடிய பெண்

சென்னை பூந்தமல்லியில் முதியவரின் பைக்கை பெண் ஒருவர் லாவகமாக திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னை பூந்தமல்லி அருகே முதியவர் விட்டுச் சென்ற ஸ்கூட்டரை பெண் ஒருவர் தலைக் கவசம் அணிந்து வந்து லாவகமாக திருடி சென்ற காட்சி வெளியாகியுள்ளது.

ஆலந்தூரைச் சேர்ந்தவர் நாகூர் மீரான். இவரது உறவினர்களை பார்க்க  பூந்தமல்லி அருகே கரையான்சாவடிக்கு இன்று மதியம் தனது ஸ்கூட்டரில்சென்றார்.

கடையின் முன்பு தனது வாகந்த்தை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று நண்பர்களை பார்த்து விட்டு வெளியே வந்து பார்த்தபோது தனது வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது,  நாகூர் மீரான் வாகனத்தை

எடுத்து வந்து கடையின் முன்பு நிறுத்தும் போது அதில் இருந்து சாவியை எடுக்காமல் கடைக்குள் செல்கிறார்.

அப்போது அந்த வழியே மற்றொரு வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி ஒரு பெண் அதனை கண்காணித்து விட்டு சென்று விடுகிறார்.

சிறிது நேரம் கழித்து நடந்து வந்த அந்த பெண் தோளில் பை மாட்டிக் கொண்டும், ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்த அந்தப் பெண் அக்கம், பக்கத்தில் பார்த்துவிட்டு அந்த வாகனத்தை அப்படியே அங்கிருந்து திருடிச் சென்றார். இந்த கட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

     அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நாகூர் மீரான்  பூந்தமல்லி போலீசில் புகார் அளித்துள்ளார் .

இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Also Watch: மாணவிகள் விடுதியில் தங்கியிருந்த பெண் துப்புரவு தொழிலாளியை அடித்து விரட்டிய பள்ளி நிர்வாகம்!

First published:

Tags: Bike Theft, Chennai