ரயிலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பெண் - அதிர்ச்சி சம்பவம்

ரயிலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பெண் - அதிர்ச்சி சம்பவம்
சில புறநகர் ரயில் சேவைகளும் நாளைய தினம் தொடரும்.
  • Share this:
ரயிலில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் ஹவுரா மெயில் இன்று அதிகாலை 3.20 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4 வது நடை மேடையில் வந்து நின்றது. அப்போது பொது பெட்டியில் உள்ள கழிவறை சுமார் 3 மணி நேரமாக உள்பக்கம் தாழிடப்பட்டு இருப்பதாக ரயில்வே காவலரிடம் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உடனடியாக ரயில்வே மெக்கானிக்கல் பணியாளர் வரவழைக்கப்பட்டு பூட்டை உடைத்து பார்த்தபோது, 35 வயது மதிக்கத்தக்க பெண்மணி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து மருத்துவர் வரவழைக்கப்பட்டு அவர் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டது.


இதையடுத்து தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் பயணித்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: கொரோனாவால் பாதிக்கப்பட்டு பூட்டிய வீட்டில் இருக்கிறேன்..! - பிரபல நடிகை பதிவு
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading