ஸ்டாலின் சார்.. ஒரு நிமிஷம் மாஸ்க்கை கழட்டுங்க சார்... - பெண்ணின் கோரிக்கையை ஏற்று முகக்கவசத்தை கழட்டிய முதல்வர்

மு.க.ஸ்டாலின்

கிருஷ்ணகிரியில் சாலையில் நின்ற பெண் முகக்கவசத்தை கழட்டக் கோரியதை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மாஸ்க்கை கழட்டி பெண்ணிடம் பேசினார்.

 • Share this:
  தமிழகத்தில் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு, 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் மாதம் தோறும் மருந்து மாத்திரைகள் வாங்கி் உட்கொண்டு வருகின்றனர். அதேபோல் சிறுநீரக செயலிழப்பால் ஏராளமானோர் வாரத்துக்கு இரண்டு முறை வரை டயாலிசிஸ் செய்து கொள்ளும் நிலையில் உள்ளனர். பல்வேறு காரணங்களால் இந்த நோயாளிகளில் பலர், முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளாததால், ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர்.

  எனவே இந்த மாதிரியான நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவும் நோக்கில், மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரியில் உள்ள சூளகிரி பகுதியில் இன்று தொடங்கி வைத்தார்.

  தமிழகத்தில் திருநெல்வேலி கிருஷ்ணகிரி சேலம் மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்துவிட்டு கிருஷ்ணகிரி சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அப்போது, சாலை ஓரமாக நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர், ‘ஸ்டாலின் சார்... மாஸ்க கழட்டுங்க சார்.. எப்போ சார்.. உங்க முகத்த பாக்குறது..’ என்று கத்தினார். காரை நிறுத்திய மு.க.ஸ்டாலின், ‘பொது இடத்தில் மாஸ்கை கழட்டக் கூடாது’ என்றார்... உடனே, ‘அந்தப் பெண் ஒரு நிமிஷம் சார்.. கழட்டுங்க.. உங்க முகத்த எப்போ பாக்குறது...’ என்றார். அதனையடுத்து, பெண்ணின் கோரிக்கையை ஏற்று முகக்கவசத்தை கழட்டினார். உடனே, அந்தப் பெண், ‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றி சார்.. அது பேர் ஸ்டாலின்தான்’ என்றார்.
  Published by:Karthick S
  First published: