Home /News /tamil-nadu /

வீட்டில் 3 சிலிண்டர்களை திறந்து வைத்துக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்.. சென்னையில் பரபரப்பு!

வீட்டில் 3 சிலிண்டர்களை திறந்து வைத்துக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்.. சென்னையில் பரபரப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

சுமார் 8 மணி நேரமாக தற்கொலை செய்யப் போவதாக வீட்டினுள் பூட்டிக்கொண்டு, வீட்டை உடைத்து உள்ளே வர முயற்சித்தால் தீ பற்ற வைத்து விடுவேன் என்று கூறி மிரட்டினார்.

    சென்னை மணலியில் வீட்டில் மூன்று சிலிண்டர்களை திறந்து வைத்துக் கொண்டு தற்கொலை செய்யப்போவதாக பெண் ஒருவர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை மணலியில் உள்ள ஈ.வே.ரா பெரியார் தெருவில் வசித்து வருபவர் ரேணுகா (40).  இவரது கணவர் ரமேஷ் கண்ணா. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த ரேணுகா தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்துள்ளார்.

    இதற்காக வீட்டினுள் உட்புறமாக பூட்டி வைத்துக் கொண்ட ரேணுகா, கேஸ் சிலிண்டரை திறந்து வைத்துக் கொண்டு தற்கொலை செய்யப் போவதாக அனைவரையும் மிரட்டி வந்துள்ளார். இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மணலி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    முதற்கட்டமாக, அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள பொதுமக்களை அசம்பாவிதங்களிலிருந்து தவிற்பதற்காக தீயணைப்பு துறையினர் வெளியேற்றினர்.

    சுமார் 8 மணி நேரமாக தற்கொலை செய்யப் போவதாக வீட்டினுள் பூட்டிக்கொண்டு வீட்டை உடைத்து உள்ளே வர முயற்சித்தால் தீ பற்ற வைத்து விடுவேன் என்று கூறி அப்பெண்மணி மிரட்டியதால் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளே செல்ல முடியாமல் வெளியில் நின்றனர். மேலும் உறவினர்கள், அக்கம் பக்கத்தினரோடு சேர்ந்து ரேணுகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    எனினும், நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையானது பலன் அளிக்காததால் அப்பகுதி முழுவதும் பதட்டம் நீடித்து வந்தது. மேலும் 8 மணி நேரமாக பொதுமக்கள் வெளியில் அமர்ந்திருப்பதால் பள்ளிக்குச் சென்ற குழந்தைகளை வீடுகளுக்குள் அழைத்துச் செல்ல முடியாமலும் வீட்டைச் சுற்றியுள்ள கடை வைத்திருப்போர் வியாபாரம் செய்ய முடியாமலும் கடையை மூடி வைத்து இருப்பதாலும் மேலும் பதற்றம் நீடித்து வந்தது.

    ஆவடியில் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த பல்சர் பைக்

    யாரேனும் உள்ளே வர முயற்சி செய்தால் அப்பெண் உடனடியாக சிலிண்டரை திறந்து விடுவதாக தெரிவித்தார். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையும் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் காவல்துறையினரும் தீயணைப்பு மீட்பு படையினரும் திணறினர்.

    மணலி தீயணைப்பு துறை நிலையம் சார்பாக சென்னை புறநகர் பகுதியிலிருந்து மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நிலைய அலுவலர் முருகானந்தம் குழுவினர் 2 தீயணைப்பு வண்டிகளில் 15 தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து, போராடி அந்த பெண் இருந்த வீடு முழுவதும் ஜன்னல்களை உடைத்து தண்ணீர் அடித்து கதவுகளை உடைத்து பெண்ணை பத்திரமாக மீட்டனர். அங்கு மயக்க நிலையில் இருந்த பெண்ணை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    இதைத்தொடர்ந்து, இந்தசம்பவம் குறித்து மணலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai, LPG Cylinder, Suicide, Threat

    அடுத்த செய்தி