முதுமலையில் புலி தாக்கியதில் பெண் உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி வனப்பகுதியில் புலி தாக்கியதில் பெண் உயிரிழந்தார்.

முதுமலையில் புலி தாக்கியதில் பெண் உயிரிழப்பு
கோப்புப்படம்
  • Share this:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, புலி, காட்டெருமை, சிறுத்தை என வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இந்த வனப்பகுதியையொட்டி பல மலைகிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மக்கள் கால்நடைகளை வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்வது வழக்கம்.

இந்நிலையில், குரும்பர்பாடி கிராமத்தை சேர்ந்த 50 வயது கெளரி என்பவர் கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது புதரில் மறைந்திருந்த புலி தாக்கியது. அதில் சம்பவ இடத்திலேயே கெளரி உயிரிழந்தார்.



இதனைதொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், 10 அதிநவீன கேமராக்களை பொறுத்தி புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்
First published: September 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading