பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பி... விஸ்வரூபம் எடுக்கும் விசாரணை

Youtube Video

டிஜிபி ராஜேஷ்தாஸ் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை தனது காருக்கு அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி டிஜிபி திரிபாதி மற்றும் உள்துறை செயலாளரிடம் புகார் அளித்தார்.

 • Share this:
  சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு குழு அமைத்துள்ளது. புகாருக்கு ஆளான டிஜிபி கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

  முதலமைச்சர் பழனிசாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் சுற்றுப்பயணம் செய்த போது சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்தார்.

  பணி முடிந்து சென்னைக்கு திரும்பும் வழியில் டிஜிபி ராஜேஷ்தாஸ் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை தனது காருக்கு அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி டிஜிபி திரிபாதி மற்றும் உள்துறை செயலாளரிடம் புகார் அளித்தார்.

  புகார் குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐஜி சீமா அகர்வால், டிஐஜி சாமுண்டேஸ்வரி உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புகாருக்கு ஆளான சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸை கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கூடுதல் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

  ராஜேஷ்தாஸ் வகித்து வந்த பொறுப்பு அமலாக்கத்துறை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளிக்கு மாற்றப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு ஐஜி முருகன் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரை விசாகா கமிட்டி விசாரணை நடத்தி வரும் மீண்டும் ஒரு பாலியல் புகார் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Must Read : குடுமிப்பிடி சண்டை - நடுத்தெருவில் மோதிக்கொண்ட ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: