முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பைக் கண்டு சாமியாடிய பெண்...!

வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பைக் கண்டு சாமியாடிய பெண்...!

News18

News18

  • 1-MIN READ
  • Last Updated :

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை கண்டு பெண்மணி சாமியாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேவனாம்பட்டினம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த இளங்கோவன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அப்பகுதியில் கனமழை பெய்த போது நல்ல பாம்பு ஒன்று அவரது வீட்டின் கூரை மீது புகுந்துள்ளது.

தகவலறிந்து வந்த பாம்பு பிடிக்கும் வீரர் செல்லா, பாம்பை லாவகமாக பிடித்தார். அப்போது, இளங்கோவனின் மனைவி சரஸ்வதி திடீரென உணர்ச்சிப் பெருக்கில் சாமி வந்ததைப் போன்று ஆடினார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பாம்பை பயபக்தியுடன் கும்பிட்டு சென்றனர். கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க 5 அடி உயரம் கொண்ட அந்த நல்ல பாம்பை காப்பு காட்டில் விட திட்டமிட்டுள்ளதாக பாம்புபிடி வீரர் செல்லா தெரிவித்தார்.

First published:

Tags: Cuddalore