கஞ்சா விற்கச் சொல்லி காவல்துறை கட்டாயப்படுத்துகிறது! மதுரை ஆட்சியரிடம் புகாரளித்தப் பெண்

  • Last Updated :
  • Share this:
கஞ்சா தொழிலில் செய்து ஒவ்வொரு மாதமும் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறி போலீசார் மிரட்டுவதாக, மதுரை காஞ்சரம்பேட்டை கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மதுரை காஞ்சரம்பேட்டை கிராமத்தை சேர்ந்த தாய் மீனாட்சி மற்றும் மருமகள் பஞ்சு கடந்த சில மாதங்கள் முன்பு வரை வயிற்று பிழைப்பிற்காக வேறு தொழில் தெரியாத நிலையில் கஞ்சா வாங்கி விற்று வந்துள்ளனர். இந்த தொழிலால் தனது குடும்பமே சீரழிந்துவிட்டதுடன், தனது கணவரும் இறந்த நிலையில் தனது தாயார் உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும் திருந்தி வாழவேண்டும் என்பதால் கஞ்சா வாங்கி விற்கும் தொழிலை கடந்த மூன்று மாதங்களாக விட்டுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே தான் விற்பனை செய்ததற்கு வழக்கு போட்டு முடிவடைந்த நிலையில் இனிமேல் கஞ்சா வாங்கி விற்ககூடாது என்ற மனநிலையில் மாற்றி தெருவோரம் இட்லி கடை நடத்தி வந்துள்ளார். எனக்கு படிப்பறிவு இல்லாததாலும் எனது குடும்ப சூழ்நிலை காரணமாகவும் தவறான பாதைக்கு சென்றுவிட்டதை அடுத்துஎண்ணத்தோடு நான் கடந்த 3 மாத காலமாக மேற்படி வாழவேண்டும் என்ற எண்ணத்தோடு நான் கடந்த 3 மாதமாக கஞ்சா விற்கும் தொழிலை செய்யவில்லை.

இந்நிலையில் கடந்த 25.11.19 திங்கட்கிழமை NIR போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வந்து தன்னை அழைத்துச் சென்று கஞ்சா விற்பதை ஏன் நிறுத்திவிட்டாய் மீண்டும் கஞ்சா விற்பனை செய்து மாதம் மாதம் பணம் கொடுக்க வேண்டுமென்றும் தற்போது உன் மீது வழக்கு போடாமல் இருக்க ரூபாய் 20,000 பணம் கொடுக்கவில்லையென்றால் 5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு போடுவோம் என்று கூறி மிரட்டிஉள்ளனர்.

இதனையடுத்து தன்னிடம் இருந்த பால்மாட்டினை விற்று ரூ.20000 கொடுத்த பின்பு தன்னை விடுவித்தனர். அதன்பின் 01 . 12 . 2019 அதிகாலை 4 மணியளவில் ஊமச்சிகுளம் காவல்நிலையத்திலிருந்து தேடி வந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறினர் .

நான் கஞ்சா விற்பனை செய்வதை மறந்து புதிய வாழ்க்கையை வாழ விரும்புகின்ற என்னை துன்புறுத்தி மீண்டும் கஞ்சா விற்க சொல்லி வற்புறுத்துவதுடன் தவறான பாதைக்கு வழிவகுக்கும் வகையில் காவல்துறையில் துன்புறுத்துவதால் தானும் தனது தாயாரும் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியின்றி உள்ள நிலையில் உள்ளதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see:

Published by:Karthick S
First published: