Home /News /tamil-nadu /

சென்னை: வரதட்சணை கொடுமையால் திருமணமான ஒரே வருடத்தில் பெண் தற்கொலை

சென்னை: வரதட்சணை கொடுமையால் திருமணமான ஒரே வருடத்தில் பெண் தற்கொலை

சம்பவம் நடந்த இடம்

சம்பவம் நடந்த இடம்

சென்னையில் வரதட்சணை கொடுமையால் திருமணமான ஒரே வருடத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

  • News18
  • Last Updated :
சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்தவர் பிரியங்கா (24). எம்.பி.ஏ பட்டதாரியான இவருக்கும், பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வரும் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரேஷ்குமார் (28) என்பவருக்கும் மேட்ரிமோனி மூலமாக பெண் பார்த்து கடந்த 2019 ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணமான இரண்டு மாதங்களிலேயே பிரச்சனையின் காரணமாக பிரியங்கா தனது தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார்.
இந்த நிலையில் நேற்றிரவு பிரியங்கா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திருமணத்தின் போது 140 சவரன் பெண்ணுக்கு நகை போடுவதாகச் சொல்லி பெண் வீட்டார் 40 சவரன் நகை மட்டுமே போட்டதாகவும், இதனால் இரு வீட்டாருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை நடந்து வந்ததாகவும் தெரியவருகிறது.

Also read... தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூட தற்போது வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

இந்த வரதட்சணை பிரச்சனை காரணமாக பிரியங்காவை மணமகன் வீட்டார் துன்புறுத்தியதாகவும் தெரியவருகிறது. இதன் காரணமாக திருமணமான இரண்டு மாதங்களிலேயே பிரியங்கா சிந்தாதரிபேட்டையிலுள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் பிரியங்காவின் தாய், தந்தையர் அடிக்கடி நிரேஷ்குமாரிடம் மீதி நகையை போட்டு விடுவதாக சொல்லி சமாதானம் செய்ய முயற்சி செய்து வந்துள்ளனர். ஆனால், நிரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மொத்த நகையையும் போட வேண்டும் என வற்புறுத்தியதாக தெரியவருகிறது.

இதனால், மன உளைச்சலில் இருந்த பிரியங்கா நேற்றிரவு தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.



வழக்கு பதிவு செய்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் நிரேஷ் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.




மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Chennai, Crime | குற்றச் செய்திகள்

அடுத்த செய்தி