வேளாங்கண்ணி அருகே வெளிநாட்டில் உள்ள கணவர் பேசாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே நிர்த்தனமங்கலத்தைச் சேர்ந்தவர் 24 வயதான சுகந்தி. இவருக்கும், தஞ்சை கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த 33 வயதான ராஜா என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த இரண்டு மாதத்தில் ராஜா வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார்.
கணவர் வீட்டில் இருந்த சுகந்தி உடல்நிலை குறைவால் நிர்த்தனமங்களத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கணவர் ராஜா, சுகந்தியிடம் பேசாமல் இருந்தாக கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த சுகந்தி, வியாழக்கிழமை வீட்டிற்கு பின்புறம் உள்ள கொட்டகையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் உள்ளவர்கள் பார்த்தபோது அவர் ஏற்கெனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற வேளாங்கண்ணி போலீசார், உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பினர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார், மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.