கணவர் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு.. திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் தற்கொலை

Youtube Video

கணவர் குடியை நிறுத்தாததால் இளம்பெண் திருமணமான மூன்றே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரவாயில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  சென்னை மதுரவாயல் அருகே கணவர் மதுபோதையில் தகராறு செய்ததால் திருமணமாகி மூன்று மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  மதுரவாயலை சேர்ந்த 20 வயதான ரேணுகாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. எலக்ட்ரீசியனாக உள்ள கார்த்தி குடித்துவிட்டு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

  இதனை ரேணுகா பலமுறை கண்டித்தும் கார்த்தி குடிப்பழக்கத்தை நிறுத்தாததால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றிய மதுரவாயல் போலீசார், இளம்பெண் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

  மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   

   
  Published by:Sankaravadivoo G
  First published: