ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி வயதானவர்களிடம் கைவரிசை காட்டிய பெண்

ஏடிம் எம் மோசடி

சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த பெண்ணை போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரனாக பதிலளித்ததால் அவரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்

 • Share this:
  உளுந்தூர்பேட்டை பகுதியில் ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி வயதானவர்களிடம் கைவரிசை காட்டிய டிப்டாப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பத்துக்கு மேற்பட்ட ஏடிஎம் எந்திரங்கள் இயங்கி வருகின்றன இங்கு 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்து வங்கியில் உள்ள பணம் எடுப்பதற்கு ஏடிஎம் மையங்களை பயன்படுத்தி வருகின்றனர் அப்பொழுது கிராமப்புறங்களில் இருந்து வருகின்ற வயதானவர்கள் மற்றும் பணம் எடுக்கத் தெரியாதவர்களிடம் நைசாக பேசி அவர்களிடம் ஏடிஎம் கார்டுகளை வாங்கிக் கொண்டு பணம் எடுக்க முடியவில்லை எனக்கூறி போலி ஏடிஎம் கார்டுகளை அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்களிடம் வாங்கிய ஏடிஎம் கார்டுகளை வைத்து வேறு ஒரு ஏடிஎம் சென்டருக்கு உடனடியாக சென்று பணம் எடுத்து மோசடி செய்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில்  உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் சென்டருக்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது சேலம் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த பெண்ணை போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரனாக பதிலளித்ததால் அவரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது அவர் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டனை பகுதியைச் சேர்ந்த ராமர் மனைவி சீதாலட்சுமி என்பதும் ஏடிஎம்-ல் மோசடி செய்து வந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்த ஒரு லட்சத்தி 67 ரூபாய் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்..

  எஸ். செந்தில்குமார் - கள்ளக்குறிச்சி 
  Published by:Arun
  First published: