ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மேட்ரிமோனியில் பழகி ஏமாற்றிய காதல் ரோமியோ.. சமாதானம் பேச அழைத்து வெளுத்தெடுத்த சிங்கப்பெண்

மேட்ரிமோனியில் பழகி ஏமாற்றிய காதல் ரோமியோ.. சமாதானம் பேச அழைத்து வெளுத்தெடுத்த சிங்கப்பெண்

மேட்ரிமோனியில் பழகி ஏமாற்றிய நபர்

மேட்ரிமோனியில் பழகி ஏமாற்றிய நபர்

மேட்ரிமோனி மூலம் பழகி இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மேட்ரிமோனி இணையத்தளம் மூலம் இளம்பெண்ணை ஏமாற்றிய காதல் ரோமியோவை பெண்ணின் உறவினர்கள் துவைத்து எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வருகிறார். திருமணத்துக்காக மேட்ரிமோனியில் தன்னுடைய விவரங்களை பதிவு செய்து வரன் தேடி வந்துள்ளார். அப்போது மேட்ரிமோனி மூலம் கோகுல கிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களுடைய பர்சல் செல்போன் எண்களை பரிமாறி பேசிவந்துள்ளனர்.  இந்த பழக்கம் திருமணப்பேச்சு வரை சென்றுள்ளது.

இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி கோகுல கிருஷ்ணன் நெருக்கமாக இருந்துள்ளார். வருங்கால கணவர் என்பதால் அவரும் அவரது ஆசைக்கு இணங்கியுள்ளார். இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் நம்பிக்கையை பெற்ற கோகுல கிருஷ்ணன் சுமார் 1.25 லட்சம் பணத்தை பல்வேறு காரணங்களை கூறி அந்தப்பெண்ணிடம் இருந்து கறந்துள்ளார்.

Also Read:  தேர்தல் பிரச்சாரத்தில் பறந்த சேர்கள்.. நாம் தமிழர் கட்சியினர் மீது அதிமுகவினர் தாக்குதல்

இதற்கிடையில் திருமணத்தை தாமதமாக்கி வந்த அந்த இளைஞர் ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருநபருடன் தொடர்பு இருப்பதாக கூறி அவரிடம் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டு விஷேசத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். கோகுல கிருஷ்ணனிடம் திருமணம் குறித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த இளைஞர் இளம்பெண்ணின் ஆடையை கிழித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைக்கண்டு ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் கோகுல கிருஷ்ணனை வீட்டில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். கோபம் தீராத அந்தப்பெண் வீட்டில் இருந்த துடைப்பத்தை கொண்டு அர்ச்சனை செய்துள்ளார். இதனை உறவினர்கள் படம் பிடித்துள்ளனர். இந்தக்காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

Also Read: வடசென்னையில் நள்ளிரவில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கும்பல் கைது

இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞரை கிண்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவம் ஜாபர்கான்பேட்டை பகுதியில் நடந்ததால் குமரன் நகர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோகுல கிருஷ்ணன் மீது குமரன் நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இளம்பெண் தாக்கியதில் காயமடைந்த கோகுலகிருஷ்ணனை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளம்பெண் தன்னை ஏமாற்றி வரவழைத்து நண்பர்களுடன் சேர்த்து தாக்கியதாக அந்த நபரும் புகார் கொடுத்துள்ளார். இளம்பெண் மற்றும் அவரது உறவினர்களை கைது செய்த போலீஸார் காவல்நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

First published:

Tags: Cheating, Crime News, Love, Matrimony