முகப்பு /செய்தி /தமிழ்நாடு / போலீஸ் ஸ்டேஷனில் பெண்ணை அடித்து துன்புறுத்தல்.. சப் இன்ஸ்பெக்டர், 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்

போலீஸ் ஸ்டேஷனில் பெண்ணை அடித்து துன்புறுத்தல்.. சப் இன்ஸ்பெக்டர், 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்

முத்தையாபுரம் காவல் நிலையம்

முத்தையாபுரம் காவல் நிலையம்

Thoothukudi : தூத்துக்குடியில் பெண்மீது வழக்குப்பதிவு செய்யாமலும், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமலும் பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது.

  • Last Updated :

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சுமதி பெண்ணை அடித்து துன்புறுத்திய விவகாரத்தில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தனிப்பிரிவு காவலர் முருகன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி, முத்தையாபுரம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி மகன் பிரபாகரன் (45), இவரது வீட்டில் கடந்த 4ம் தேதி 10 பவுன் நகை மாயமானது. இது தொடர்பாக அவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சண்முகம் மனைவி சுமதி (40) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கடந்த 7ம் தேதி பெண் காவலர்கள் மெர்சினா, கல்பனா, உமா மகேஸ்வரி ஆகிய மூவரும் சுமதியை முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.  மேலும் அவர்கள் மூவரும் சுமதியை கடுமையாக அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதில் காயம் அடைந்த சுமதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும், பெண் காவலர்கள் தன்னை துன்புறுத்தியதாக அவர் கடந்த 11ஆம் தேதி எஸ்பியிடம் மனு அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். விசாரணையில், புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 15ம் தேதி பெண் காவலர்கள் மூவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்தும், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத தனிப்பிரிவு காவலர் முருகன் என்பவரை  ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்தும் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே இந்த விவகாரத்தில் தூத்துக்குடி எஸ்பி பரிந்துரையின் பேரில், முத்தையாபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துமாலையை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

Must Read : ஒவ்வொரு ஆண்டும் 12 மணி நேரம் ஊரை காலி செய்யும் கிராம மக்கள் - பழமையான நம்பிக்கைதான் காரணம்!

சாத்தான்குளத்தில் தந்தை-மகனை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலையத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - பி. முரளி கணேஷ், தூத்துக்குடி.

First published:

Tags: Police station, Police suspended, Thoothukudi