ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தண்ணீர் பஞ்சத்தின் மற்றொரு கோர முகம்... தண்ணீர் கேட்டதால் தாக்கப்பட்ட பெண்...!

தண்ணீர் பஞ்சத்தின் மற்றொரு கோர முகம்... தண்ணீர் கேட்டதால் தாக்கப்பட்ட பெண்...!

தாக்கப்பட்ட பெண்

தாக்கப்பட்ட பெண்

சென்னை பல்லாவரம் அருகே குடிநீருக்காக பெண் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • News18
  • 2 minute read
  • Last Updated :

3 குடம் தண்ணீர் கூடுதலாக வேண்டும் என்று கேட்டவரை தண்ணீர் தராமல் சரமாரியாக தாக்கியதில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பல்லாவரம் அடுத்துள்ள நாகல்கேணியில் 4 தெருக்களுக்கு ஒரு தண்ணீர் டேங்க் ஒன்று நகராட்சி வைத்துள்ளது. அந்த 4 தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள மக்கள் பணிக்கு செல்வதால் இரவு நேரத்தில் மட்டும்தான் தண்ணீர் பிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதி மக்கள் அனைவரும் அந்த ஒரு தண்ணீர் டேங்கைதான் நம்பி உள்ளனர். ஆனால், அந்த டேங்கின் அருகாமையில் வசித்து வரும் சங்கர் என்பவர் அங்குள்ள பொதுமக்களை தண்ணீர் பிடிக்க விடாமல், அவரும் அவரை சேர்ந்தவர்களும் தண்ணீர் பிடித்த பிறகுதான் மற்றவர்கள் பிடிக்க விடுவார்கள்.

இதனால், பலமுறை தண்ணீர் பிடிக்கும் போது சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள லலிதா என்பவருக்கும் சங்கர் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் சங்கரின் மனைவி மற்றும் மகனும் லலிதாவை சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்து கீழே தள்ளியுள்ளனர். அதில் லலிதா மயக்கம் அடைந்தார்.

இதை அடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் லலிதாவை எழுப்பியுள்ளானர். ஆனால் அவர் எழுந்து கொள்ளாததால் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதை அடுத்து பாதிக்கப்பட்ட லலிதாவின் கணவர், சங்கர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் ஒரு நாள் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அது மட்டுமின்றி இனியாவது அனைவரும் சரிசமமாக தண்ணீர் பிடிப்பதற்கு வழி வகை செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் கோரிக்கையாக உள்ளது.

Also see... ஒடிசாவில் கரையைக்கடக்கும் ஃபோனி புயல்...

Also see.... நாளை கரையைக் கடக்கிறது ஃபோனி... ஒடிசா கடும் சேதத்தை சந்திக்கும் என எச்சரிக்கை...!

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, Drinking water