ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வருமானவரித்துறையில் வேலை வாங்கித்தருவதாக ஆசை காட்டி மோசடி.. ரூ.12 லட்சம் சுருட்டிய பெண் கைது..

வருமானவரித்துறையில் வேலை வாங்கித்தருவதாக ஆசை காட்டி மோசடி.. ரூ.12 லட்சம் சுருட்டிய பெண் கைது..

வருமானவரித்துறையில் வேலை வாங்கித்தருவதாக ஆசை காட்டி மோசடி.. ரூ.12 லட்சம் சுருட்டிய பெண் கைது..

வருமானவரித்துறையில் வேலை வாங்கித்தருவதாக ஆசை காட்டி மோசடி.. ரூ.12 லட்சம் சுருட்டிய பெண் கைது..

முறையாக அரசு சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்காமல் குறுக்குவழியில் சென்று வேலை வாங்க திட்டமிட்ட இளைஞர்கள் 12 லட்சம் ரூபாயை இழந்துள்ளனர். போலி பணி ஆணை வழங்கி பெண் மோசடியை அரங்கேற்றியது எப்படி?

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி 12 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த சுபாஷினி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வேலைவாய்ப்பு நிறுவனம் பெயரில் போலி பணியாணை வழங்கி மோசடியை அரங்கேற்றியது எப்படி?

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஸ்ரீவிநாயகா சொல்யூசன் என்ற பெயரில் வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. சுபாஷினி. அசோக்குமார் ஆகியோர் இணைந்து இந்த வேலை வாய்ப்பு  நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

நிறுவனத்தை தஞ்சை மாவட்டம் மரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன், பாபநாசம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் ஆகியோர் அணுகியுள்ளனர். அவர்களிடம் டெல்லியில் வருவமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக நிறுவனத்தினர் உறுதி கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்காக தலா 6 லட்சம் ரூபாய் பணமும் வாங்கியுள்ளனர். சில நாட்கள் கழித்து இருவருக்கும் வருமானவரித்துறை வேலைக்கான ஆணை நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

அது போலியானது என்பது பின்னர் தான் தெரியவந்தது. இதையடுத்து சுபாஷினி, அசோக்குமாரிடம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர்.

பணத்தை திருப்பித் தர தாமதப்படுத்தி வந்த அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகினர். பணம் கொடுத்த ஏமாந்த இருவரும் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தங்கள் புகாரில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் நேற்று இரவு இடிகரை பகுதியில் வீட்டில் இருந்த  சுபாசினியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அசோக்குமாரை தேடி வருகின்றனர். இதே போல் பலரிடம் மோசடி செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் பந்தயசாலை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Income tax