Home /News /tamil-nadu /

சென்னையில் பிரபல துணிக்கடையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி காஸ்ட்லி புடவைகளை திருடிய பெண் கைது

சென்னையில் பிரபல துணிக்கடையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி காஸ்ட்லி புடவைகளை திருடிய பெண் கைது

கூட்ட நெரிசலில் புடவைகளை திருடிய பெண் கைது

கூட்ட நெரிசலில் புடவைகளை திருடிய பெண் கைது

பிரபல துணிக்கடையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி விலையுயர்ந்த சேலைகளை அணிந்திருந்த ஆடைக்குள் மறைத்து வைத்து திருடிய பெண் கைது செய்யப்பட்டார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தீபாவளி பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பிரதான கடை வீதிகள், தெருக்கள் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றன. விழாக்கால கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால், இதனை தடுக்க காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் முக்கிய குற்றவாளிகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    அரசு வழங்கும் நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சிகள் இன்று முதல் தொடக்கம்.. லாக் - இன் விவரங்கள் இங்கே..

    மேலும், திருடர்கள் ஜாக்கிரதை, பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும், அவசர உதவிக்கான காவல் நிலையங்களின் அழைப்பு எண்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் மாநகர பகுதிகளில் ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ளன.

    பொருட்கள் திருட்டுப்போனால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்கவும் பொதுமக்களுக்கு காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அவள் என்ன வாக்குறுதிகள் கூறியிருக்கிறாளோ அதை செய்வாள்: கமலா ஹாரிஸின் சித்தி


    இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் வீராஸ் துணிக்கடை செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி இந்த கடையில் ஏராளமான பொதுமக்கள் புதிய ஆடைகளை வாங்கி செல்கின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் ஒருவர் தான் அணிந்திருந்த சேலையில் மறைத்து, புதிய விலையுயர்ந்த சேலைகளை திருடியுள்ளார். சிசிடிவி காட்சியின் மூலம் இதை பார்த்த கடை ஊழியர்கள் அந்த பெண்ணை பிடித்து, அவரிடம் இருந்து திருடிய சேலைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் பிடிபட்ட பெண்ணை வண்ணாரப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    படிக்க...திருச்சி : களைக்கட்டும் தீபாவளி விற்பனை... பாதுகபாப்பு பணிகள் தீவிரம்

    போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட பெண் ஆந்திராவை சேர்ந்த நிர்மலா என்பதும், ஏற்கனவே தி.நகர் சரவணா ஸ்டோர் போன்ற கடைகளில் இது போன்று திருடியதற்காக கைது செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.













    ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Deepavali, Shopping malls, Thief

    அடுத்த செய்தி