கள்ளக்காதலை கண்டித்த தாய், சகோதரியை ஆள்வைத்து படுகொலை செய்த பெண் கைது

Youtube Video

மேலூர் அருகே வீட்டில் கள்ளக்காதலை கண்டித்ததால் தாய் மற்றும் சகோதரியை ஆள்வைத்து கொலை செய்த பெண் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • Share this:
    மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டாங்குடியைச் சேர்ந்தவர், 47 வயதான நீலாதேவி, இவருக்கு அகிலாண்டேஷ்வரி, மகேஷ்வரி என 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், இளைய மகள் அகிலாண்டேஷ்வரி கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து தாய் நீலாதேவியுடன் வசித்து வருகிறார். மூத்த மகள் மகேஷ்வரி கணவருடன் அதே ஊரில் அருகில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் மகேஷ்வரிக்கு அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒரு நபருடன் முறையற்ற உறவு இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து அறிந்ததும் தாய் லீலாதேவியும், இளையமகள் அகிலாண்டேஷ்வரியும், மகேஷ்வரியைக் கண்டித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை வற்புறுத்தி கூறிய நிலையில், மகேஷ்வரி சில மாதங்களாக உறவைத் துண்டித்துள்ளார்.

    Also Read : பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு எதிரான வன்கொடுமை பல மடங்கு அதிகரிப்பு.. அதிரவைக்கும் புள்ளிவிவரம்

    இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை இரவு நீலாதேவியும், அகிலாண்டேஷ்வரியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் வருவதற்குள் மர்மநபர்கள் தப்பியோடினர். தகவலின் பேரில் விரைந்து வந்த மேலூர் போலீசார், கொலையான இருவர் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Also Read : தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஷெரீன் - என்ன ஆச்சு தெரியுமா?

    இச்சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் நீலாதேவியின் மூத்த மகள் மகேஷ்வரிக்கு முறையற்ற உறவு இருந்து வந்ததும். அதை கொலையான தாயும், மகளும் கண்டித்ததும் தெரியவந்தது.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மகேஷ்வரி தனது கள்ளக்காதலன் சசிக்குமார் மூலம் இருவரையும் வெட்டி படுகொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த மேலூர் காவல்துறையினர் இது தொடர்பாக கொலைக்கு பயன்படுத்திய கத்தி போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
    Published by:Vijay R
    First published: