மனைவியின் அனுமதியின்றி அவரது செல்போன் உரையாடலை பதிவு செய்வது மனைவியின் தனியுரிமை (Privacy) மீறல் என்று, பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
விவாகரத்து தொடர்பான வழக்கின்போது, மனைவிக்கும், கணவருக்கும் இடையே நடந்த செல்போன் உரையாடலை பதிவு செய்து கொள்ளலாம் என்று, ஏற்கனவே நீதிமன்ற உத்தரவு உள்ளது. இந்து திருமண சட்டம் 1955, பிரிவு 13-ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இது தொடர்பான முந்தைய நீதிமன்ற உத்தரவை பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கணவர் கொடுமைப்படுத்தவதாக கூறி, தனக்கு நீதி பெற்றுத் தர வேண்டி பெண் ஒருவர் கடந்த 2017-ல் பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதே நேரம் அவரது கணவர் விவகாரத்து தரக்கோரி, பதிண்டா குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
Also Read : ஹெலிகாப்டர் விபத்து: மீட்பு பணியில் உதவிய உள்ளூர் மக்கள், தமிழக அரசுக்கு இந்திய விமானப் படை நன்றி
வழக்கு விசாரணையின்போது, மனைவியுடன் நடந்த செல்போன் உரையாடலை கணவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முயன்றார். இதற்கு மனைவியின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த கணவர் தரப்பு வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட பெண், குற்றம் செய்தார் என்பதற்கான ஆதாரம் செல்போன் உரையாடலில் உள்ளதாகவும், இதனை குடும்ப நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாகவும் கூறினார்.
விசாரணை நடத்திய நீதிபதி லிசா கில் தலைமையிலான அமர்வு, பொதுவான சாட்சியங்களை ஏற்றுக் கொள்வதாகவும், செல்போன் உரையாடல் அடங்கிய சிடியை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும் கூறினர். மேலும், மனைவியின் அனுமதியின்றி அவரது செல்போன் உரையாடலை பதிவு செய்வது என்பது தனியுரிமை மீறல் என்று தெரிவித்தனர்.
Also Read : Omicron தொற்று பரவல்: மும்பையில் 144 தடை உத்தரவு அமல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.