• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிறப்பு வகுப்புகள் செல்லாமல், முதல் முயற்சியிலே நீட் தேர்வில் தேசிய அளவில் 43 வது இடம் பிடித்து தஞ்சை மாணவன் அசத்தல்!

சிறப்பு வகுப்புகள் செல்லாமல், முதல் முயற்சியிலே நீட் தேர்வில் தேசிய அளவில் 43 வது இடம் பிடித்து தஞ்சை மாணவன் அசத்தல்!

சிறப்பு வகுப்புகள் செல்லாமல், முதல் முயற்சியிலே நீட் தேர்வில் தேசிய அளவில் 43 வது இடம் பிடித்து தஞ்சை மாணவன் அசத்தல்!

சிறப்பு வகுப்புகள் செல்லாமல், முதல் முயற்சியிலே நீட் தேர்வில் தேசிய அளவில் 43 வது இடம் பிடித்து தஞ்சை மாணவன் அசத்தல்!

சிறப்பு வகுப்புகள் செல்லாமல், முதல் முயச்சியிலே நீட் தேர்வில் தேசிய அளவில் 43வது இடமும், மாநில அளவில் 3வது இடமும் பிடித்து தஞ்சை மாணவன் அசத்தியுள்ளார்.

  • Share this:
நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் அகில இந்திய அளவில் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை தரமணி நகரை சேர்ந்த அரவிந்த் என்ற மாணவன்  710 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 43 வது இடமும், மாநில அளவில் 3-வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை தரமணி நகரை சேர்ந்த மின்வாரிய ஊழியர் ரவிச்சந்திரன் -  எல்ஐசி ஊழியர் வேலம்மாள் தம்பதியின் இரண்டாவது மகன் அரவிந்த், எந்த பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமல், சிறப்பு வகுப்புகள் செல்லாமல், முதல் முறையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவரது பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாணவன் கூறுகையில், எந்த அழுத்தமும் இல்லாமல், பெற்றோர்கள், சகோதரி, பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதிய தன்னால் வெற்றி முடிந்ததாக கூறுகிறார். மேலும் வீட்டில் இருந்தப்படியே முறையாக பயிற்சி பெற்றும், மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி பயிற்சி எடுத்ததால் என்னால் வெற்றி பெற முடிந்தது என தெரிவித்தார்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், மாணவனுக்கு எந்த அழுத்தமும் நாங்கள் கொடுத்ததில்லை, அவன் இஷ்டம்போல் படிக்க விட்டோம் அதனால் அவனால் வெற்றி பெற முடிந்தது. எனவே மாணவர்களின் விருப்பப்படியே செயல்பட பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். பெற்றோர்கள் அழுத்தம் கொடுக்காமல் இருந்தால், நீட்டால் ஏற்படும்  தற்கொலை என்பது குறையும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: