ஒரே எண் கொண்ட பான் கார்டு இருவருக்கு விநியோகம்: ஓராண்டாகியும் நடவடிக்கை இல்லை

இருவரின் பெயர் சேகர் என்பதும், அடுத்ததாக இவர்கள் இருவரும் ஒரே தேதியில் பிறந்துள்ளனர் என்பதும், அதன் தொடர்ச்சியாக இருவரின் பெற்றோர்களும் பெயர்களும் ஒன்றாக இருப்பதாலும் இந்தக் காரணங்களால்தான் இரண்டு பேருக்கும் ஒரே எண்ணில் வருமானவரித்துறை பான் கார்டு வழங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: December 10, 2018, 3:28 PM IST
ஒரே எண் கொண்ட பான் கார்டு இருவருக்கு விநியோகம்: ஓராண்டாகியும் நடவடிக்கை இல்லை
மாதிரி பான் கார்டு
Web Desk | news18
Updated: December 10, 2018, 3:28 PM IST
சிவகங்கையில் இரண்டு நபர்களுக்கு ஒரே எண்ணில் பான் கார்டு வழங்கப்பட்டுள்ளதால், வங்கியில் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், வயது 52. இவர் சிவகங்கை வணிகவியல் குற்றப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது வீடு காரைக்குடி போலீஸ் காலனியில் உள்ளது. இவர் கடந்த 2008-ம் ஆண்டு வருமான வரி துறை மூலம் பான்கார்டு பெற்றுள்ளார். அதன் எண் CCOPSO932F இந்த என்னையே தனது வங்கிக் கணக்குகளுடன் இணைத்துள்ளார். இந்த நிலையில் சேகர் வீடு கட்டுவதற்கு திட்டமிட்டு வங்கியில் வீட்டுக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதை ஆய்வு செய்த வங்கி மேலாளர், “பல இடங்களில் நீங்கள் கடன் வங்கி நிலுவை வைத்துள்ளீர்கள். எனவே உங்களுக்கு கடன் தர இயலாது” என மறுத்து விட்டார்.

அதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற சேகர், நான் எங்கும் இதுவரை கடன் வாங்கவில்லை என்று வங்கி மேலாளரிடம் மறுத்துள்ளார். உடனே அதற்கு ஆதாரமாக மேலாளர் அறிக்கையை கொடுத்துள்ளார். அதில் சேகர், காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் வங்கி ஒன்றில் கடன் வாங்கி வைத்திருப்பதாக தகவல் இருந்தது. உடனே சேகர் என் ஆத்தூரில் உள்ள வங்கிக்கு நேரடியாக சென்று மேலாளரிடம் நான் உங்கள் வங்கியில் கடன் வாங்கவே இல்லை. ஆனால் எனது பெயரில் வங்கியில் எப்படி கடன் நிலுவையில் உள்ளது என்று கேட்டுள்ளார்.

அதனடிப்படையில் வங்கி மேலாளர் இது குறித்து ஆய்வு செய்தார். அப்போது வங்கியில் கடன் வாங்கி வைத்திருப்பது ஏனாத்தூர் அருகில் உள்ள சேகர் என்பது தெரியவந்தது. அவர் வங்கிக்கு வழங்கிய பான் கார்டு என்னும் சேகர் பான் கார்டு எண்ணும் ஒன்றாக இருப்பது தெரியவந்தது. மேலும் இருவருக்கும் ஒரே எண்ணில் பான் கார்டு இருந்ததால்தான் சேகர் வாங்கிய கடன் சப்-இன்ஸ்பெக்டர் சேகரின் சிபில் அறிக்கையில் ஏறி உள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இருவருக்கு வழங்கிய பான் கார்டு குறித்து விசாரணை நடத்திய மேளாளருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதாவது இருவரின் பெயர் சேகர் என்பதும், அடுத்ததாக இவர்கள் இருவரும் ஒரே தேதியில் பிறந்துள்ளனர் என்பதும் அதன் தொடர்ச்சியாக இருவரின் பெற்றோர்களும் பெயர்களும் ஒன்றாக இருப்பதாலும் இந்தக் காரணங்களால்தான் இரண்டு பேருக்கும் ஒரே எண்ணில் வருமானவரித்துறை பான் கார்டு வழங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், சப் இன்ஸ்பெக்டர் வருமானவரித்துறை செய்த குளறுபடிகள் குறித்து புகார் அளித்து ஒரு வருடம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

Also see...

First published: December 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...