ஏற்றுமதி குறைந்துள்ள நிலையில் புதுமையான தயாரிப்புகளால் மீண்டு வரும் திருப்பூர்..!

ஏற்றுமதி குறைந்துள்ள நிலையில் புதுமையான தயாரிப்புகளால் மீண்டு வரும் திருப்பூர்..!
மாஸ்க்
  • Share this:
ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்துள்ள நிலையில் தேவையை உணர்ந்து புதுமையான தயாரிப்புகளால் மீண்டு வருகிறது திருப்பூர்.

பின்னலாடைத் துறையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது திருப்பூர் மாநகரம் இந்திய அளவில் முதன்மையான பின்னலாடை ஏற்றுமதி செய்து வரும் நகராக திருப்பூர் விளங்குகிறது.

ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி வாயிலாக அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் நகராகவும் வெளிநாட்டு வர்த்தகத்தில் 18,000 கோடி ரூபாய் வர்த்தகத்தையும் செய்துவரும் நகராக திருப்பூர் உள்ளது.


இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை விற்பனை பெருமளவு சரியத் துவங்கியது.இதன் காரணமாக திருப்பூரிலிருந்து இந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்ட சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் தேக்கம் அடைந்தது. தொடர்ந்து கொடுக்கப்பட்ட ஆர்டர்கள் காண தொகையை திருப்பூர் நிறுவனங்கள் கூறிவரும் நிலையில் புதிய ஆர்டர்கள் தற்பொழுது கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் மாஸ்க் உற்பத்தி திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு கை கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது. முதலில் மருத்துவ ஆடைகளுக்காக நான் ஓவன் எனப்படும் போம் துணிகளைக் கொண்டு செய்யப்பட்டு வந்த முகக் கவசங்கள் தற்பொழுது பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகளுக்கு ஏற்ற டிசைன்களிலும் விருப்ப நடிகர்களின் முகம் பொறித்த முகக் கவசங்கள் இரவில் ஜொலிக்கும் ரேடியம் பிரிண்டிங் கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது.மேலும், காதுகேளாத நபர்களுக்கு உதட்டின் அசைவை கொண்டு வார்த்தைகளை கண்டுபிடிக்கும் விதத்தில் முகக் கவசங்கள், வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு கண்களையும் மூடு வகையிலான முகக் கவசங்கள், முடிதிருத்தும் கடைகளுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் மேசை நாற்காலி கவசங்கள் மற்றும் முடி திருத்தம் செய்யும் நபர் வாடிக்கையாளர் இருவருக்கும் முழு கவச உடை அதேபோன்று டாட்டூ கடைகளில் பணியாற்றுபவர்களுக்கான கவச உடைகள் என 180 விதமான மாஸ்க்குகள் மற்றும் கவச உடைகள் தற்பொழுது திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

புதிய பொருட்களின் உற்பத்தியை துரிதப்படுத்துவது தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வதுடன் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்கும் என்பதை உணர்ந்து திருப்பூர் தொழில் துறையினர் முக கவச தயாரிப்பில் ஈடுபாடு காட்டி வருவது கொரோனா பாதிப்பிலிருந்து திருப்பூர் விரைவில் மேலும் என்பதையே உணர்த்துவதாக அமைந்துள்ளது.

 

Also see...
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading