ஓ.பி.சி. இடஒதுக்கீடு தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி - எம்.பி வில்சன்

மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கான இட ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என திமுக வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.சி. இடஒதுக்கீடு தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி - எம்.பி வில்சன்
வில்சன்
  • Share this:
மருத்துவப் படிப்பில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி எனவும் தமிழகம் முன் உதாரணமாக திகழ்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

திமுக தோழமைக் கட்சிகள், ஆளுங்கட்சி அனைவரும் இணைந்து தொடுக்கப்பட்ட வழக்கில் வெற்றி கிடைத்துள்ளது.
தீர்ப்பில் 3 நபர் கமிட்டி அமைக்கப்பட்டவேண்டும், மருத்துவ கவுன்சில் செயலர், தமிழக சுகாதாரத்துறைச் செயலர், ஆகியோர் கொண்ட 3 நபர் கமிட்டியாக அமைக்கப்படவேண்டும்.


இந்த கமிட்டி இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு உண்டு. மத்திய அரசு கொடுப்பதில் தடையில்லை எனத் தெரிவித்துள்ளனர். சட்ட ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ தடையில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

Also read... ஓபிசி இட ஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்றம் மிகச்சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது - வைகோமத்திய அரசின் வாதத்தையும், மருத்துவ கவுன்சில் வாதத்தையும் நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். அடுத்த கல்வி ஆண்டில் இந்த முறையைக் கொண்டு வரவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.

தமிழகம் எப்போதும் இட ஒதுக்கீட்டுக்கு முன்னோடி. இதைக் காண்பித்து மற்ற மாநிலங்களிலும் இடஒதுக்கீடு வாங்கலாம்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading