• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உங்களுக்கு இடஒதுக்கீடு தருவாங்களா? கனிமொழிக்கு காயத்ரி ரகுராம் கேள்வி

உங்களுக்கு இடஒதுக்கீடு தருவாங்களா? கனிமொழிக்கு காயத்ரி ரகுராம் கேள்வி

காயத்ரி

காயத்ரி

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வர வேண்டும் என்பதே திமுகவின் நிலைபாடு என்று கனிமொழி கருத்து தெரிவித்துள்ளதற்கு பாஜகவின் காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார்.

  • Share this:
    தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தரவேண்டும் என்பதே திமுகவின் லட்சியம் என்று கனிமொழி எம்.பி. கூறியிருந்த நிலையில், இதனை குறிப்பிட்டு அவரை பாஜகவின் காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

    மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கருப்பு கொடியேந்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர். திமுக எம்.பி.யும் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தில் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, ஊரக உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அதே போன்று சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வர வேண்டும் என்பதே திமுகவின் நிலைபாடு  என்று கூறியிருந்தார்.

    இதனை பாஜகவின்  கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராக உள்ள காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “திமுகவில் முதல்வராக இருக்க உங்களுக்கு இட ஒதுக்கீடு தருவார்களா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    காயத்ரி ரகுராமின் கருத்தை ஆதரித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: