ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

''2024 தேர்தலில் அணிலைப் போல அமமுக செயல்படுவோம்'' - டிடிவி தினகரன் பேச்சு

''2024 தேர்தலில் அணிலைப் போல அமமுக செயல்படுவோம்'' - டிடிவி தினகரன் பேச்சு

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

அதிமுக இன்று தலையில்ல முண்டமாக உள்ளது, எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் உள்ளார். - டிடிவி தினகரன்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  2024 நாடாளுமன்ற தேர்தலில் அமமுக கட்சி அணிலை போல செயல்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

  அமமுகவுடன் கூட்டணி வைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “திமுக வீழ்த்த வேண்டும் என்றால் அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் சேர வேண்டும் என்று தான் கூறினேன். அரைகால் சதவீதம் கூட எடப்பாடியுடன் கூட்டணி சேர்வதற்கு எனக்கோ அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு எண்ணம் இல்லை.” என கூறினார்.

  தமிழ் குடும்பங்களை மீண்டும் அகதிகளாக்குவதா? நீலகிரியில் போராட்டம் அறிவித்த அண்ணாமலை! (news18.com)

  இதனைதொடர்ந்து, “மெகா கூட்டணி என்று பேசுபவர்களும் அடுத்தவர்களை தாழ்த்தி பேசுபவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுகவில் ஒரே கட்சிக்கு ஒரு மாவட்டத்தில் இரண்டு செயலாளர்கள் இருக்கும் நிலை இருக்கிறது. அதிமுக இன்று தலையில்ல முண்டமாக உள்ளது, எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் உள்ளார். வருங்காலத்தில் அவர்களது நிலையை அவர்கள் உணரும் காலம் வரும்” என பேசினார்.

  மேலும், “இந்த மக்களவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அணிலை போல செயல்படுவோம். பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக தமிழகத்தில் இருப்போம்” என கூறினார்.

  மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக, பாஜக அல்லது காங்கிரஸுடன் தான் கூட்டணி வைக்கும் என தெரிவித்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: BJP, Congress, TTV Dhinakaran