முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தலைவர் பதவியில் இல்லாவிட்டாலும் காங். வளர்ச்சிக்காக செயல்படுவேன் – திருநாவுக்கரசர்

தலைவர் பதவியில் இல்லாவிட்டாலும் காங். வளர்ச்சிக்காக செயல்படுவேன் – திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர் (கோப்புப் படம்)

திருநாவுக்கரசர் (கோப்புப் படம்)

கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்கவுள்ளேன் என்றார் திருநாவுக்கரசர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

‘தலைவர் பதவியில் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்படுவேன்’ என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள்  தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தலைவர் பதவியை இழந்தபின் திருநாவுக்கரசர் டெல்லியிலிருந்து சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு அவருக்கு மாலை அணிவித்தும், முழக்கங்களை எழுப்பியும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது: தலைமைப் பொறுப்பு மாற்றப்பட்டதற்கு காரணங்கள் எதுவுமில்லை. வரும் மக்களவைத்  தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதும், தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

தமிழகத்தில் காங்கிரஸ் தலைமை மாற்றப்பட்டாலும் ராகுல் காந்தியின் ஆலோசனைப்படி காங்கிரஸ் கட்சிக்காக தொண்டர்களுடன் இணைந்து செயல்படுவேன். கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்கவுள்ளேன்.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை மட்டுமின்றி கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளேன் என்றார் திருநாவுக்கரசர்.

Also watch

First published:

Tags: Congress leader, Thirunavukkarasar