Home /News /tamil-nadu /

இனி புது நித்யானந்தாவை பார்ப்பீங்க... புது கைலாசாவை பாப்பீங்க... அதிரடியாக அறிவித்தார்!

இனி புது நித்யானந்தாவை பார்ப்பீங்க... புது கைலாசாவை பாப்பீங்க... அதிரடியாக அறிவித்தார்!

இனி புது நித்யானந்தாவை பார்ப்பீங்க... புது கைலாசாவை பாப்பீங்க...

இனி புது நித்யானந்தாவை பார்ப்பீங்க... புது கைலாசாவை பாப்பீங்க...

கடந்த 3 மாதத்தில் எனது உடல், மூளை அனைத்தும் மாறி இருக்கிறது. இன்னும் எனது சமாதி நிலை முடியவில்லை என நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

  3 மாதங்களுக்கு பிறகு சமூகவலைதளங்கள் மூலம் தோன்றிய நித்தியானந்தா, தனது உடல்நிலை குறித்த பல்வேறு சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

  பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல், மோசடி என்று இந்தியாவின் பல மாநிலங்களில் வழக்குகளில் சிக்கி கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தனது சில சீடர்களுடன் தலைமறைவானவர் சாமியார் நித்தியானந்தா.

  தொடர்ந்து, தனித் தீவு ஒன்றை குத்தகைக்கு எடுத்து, அதனை கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். கைலாசா என்ற நாட்டை அறிவித்தாலும் இதுவரை கைலாசா எங்கிருக்கின்றது ,என்பதையும் அங்கு அவர் வாழும் வாழ்வியல் முறை பற்றியும் எந்த புகைப்படத்தையும் வெளியிட்டதில்லை.

  ஆனால் கிராப்பிக் செய்யப்பட்ட பின் திரைக்கு முன்னாக அமர்ந்துக்கொண்டு தனது சீடர்களுக்கு ஆன்மீக சத்சங் என்ற யூடியூப் நேரலை சொற்பொழிவை பேசிவந்தார். இப்படி கொரோனா காலகட்டத்தில் நித்தியானந்தா அவரது யூடியூப் பக்கத்தில் பேசிவந்தது மிகபிரபலம் .

  நித்தியானந்தாவின் இப்படி பட்ட பேச்சுகள் இணையத்தில் வைரலாகி கைலாசாவில் நித்தி ஜாலியாக இருக்கிறார் போல என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இதனிடையே, கடந்த 3 மாதங்களாக நித்தியானந்தா நேரலையில் தோன்றவில்லை.

  இதைத்தொடர்ந்து, அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் வெளியானது. அதாவது, உப்புக்காற்று, உணவு முறையில் மாற்றம், காலநிலை மாற்றம் என அனைத்தும் நித்தியானந்தா உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும்,   அதனால் அவர் உடல் மெலிந்து சோர்வானதாகவும் கூறப்பட்டது.

  மேலும், நித்தியானந்தாவுக்கு கல்லீரல் அலர்ஜீயும், சிறுநீரக தொந்தரவும் ஏற்பட்டதாகவும், அது போக போக நுரையிரல் தொற்றுவரை சென்று மூச்சு விட முடியாமல் ஆக்சிஜன் உதவியுடன் இருந்து வருகின்றார் என்றும் கூறப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எனினும், அவை புரளி எனவும், நான் ஆழ்ந்த சமாதி நிலையில் இருப்பதாகவும் நித்யானந்தா தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.  அதன்பிறகு சமாதி நிலையில் இருந்து பேசுவதாக கூறி, தொடர்ந்து சில கருத்துக்களையும் பதிவிட்டிருந்தார். எனினும், அதன் பின்பு அவரது உடல்நிலை குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்து வந்தது.

  இந்நிலையில், நேற்று இரவு சமூக வலைதளங்கள் மூலம் நேரில் தோன்றி நித்யானந்தா பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, ஏப்ரல் 13ம் தேதி முதல் ஜூலை 13ம் தேதி வரை நிறைய நடந்துள்ளது. அது உங்களுக்கு 3 மாதம். எனக்கு ஒரு யுகம். கடந்த 3 மாதத்தில் எனது உடல், மூளை அனைத்தும் மாறி இருக்கிறது. இனிமேல் என்னிடமும், பூஜைகளிலும் மாற்றத்தை காண்பீர்கள். இன்னும் எனது சமாதி நிலை முடியவில்லை. கைலாசாவும் அப்டேட் ஆகியுள்ளது. கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி லிங்கோபத்வரை ஒளியாக நான் பார்த்தவுடன் அனைத்தும் மறந்துவிட்டது.

  இனி வரும் நாட்களில் நான் சொல்ல வேண்டியதை சொல்கிறேன். பரமசிவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் அவர் 10 ஆயிரம் அடி எடுத்து வைப்பார் என்பது பழைய பழமொழி. ஆனால் புதிய உண்மை என்னவென்றால், அவர் உங்களை நோக்கி பில்லியன் கணக்கான படிகளை எடுக்கிறார். அப்போது தான் நீங்கள் அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்பீர்கள் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

  நான் இப்போது உங்களுக்கு சொல்கிறேன், அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்பட்ட புதிய தொடக்கம் மற்றும் முடிவுகள் ஆகியவற்றை பார்க்கும்போது இந்த 3 மாத கால இடைவெளியில் நடந்தது உங்களுக்கு புரியும்.

  அழியாத ஒன்றின் மீது ஈடுபாடு வரும், அதன் மீது ஈர்ப்பு வரும். அது வந்து விட்டாலே பரமசிவன் உங்களுக்குள் நிறைந்து விடுவார். அவருக்குள் நீங்கள் கரைந்து விடுவீர்கள். இதுதான் சமாதி நிலை. அதில் பல நிலைகள் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

   
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Nithyananda, Nithyanandha

  அடுத்த செய்தி