ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மழையால் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா? அமைச்சர் பெரிய கருப்பன் பதில்

மழையால் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா? அமைச்சர் பெரிய கருப்பன் பதில்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மழை பாதிப்பு நிவாரண பணிகளை திமுக அரசு சரிவர கையாளவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சூழலில் உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால் மழை வெள்ள பாதிப்பு முக்கிய விளைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் ஒருவாரத்திற்கு மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அரசு சரி செய்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் தேங்கிக் கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மழை பாதிப்பு காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன், ‘தேர்தல் நடத்துவதற்கான அனைத்து உதவிகளையும் தேர்தல் ஆணையத்திற்கு முதலமைச்சர் செய்து கொடுத்துள்ளார். எந்த சூழ்நிலையிலும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மட்டுமே அறிவிக்கும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி... விஜயகாந்த் அறிவிப்பு

வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டாலும், கடந்த காலத்தைவிட சேதங்கள் குறைவு. இதுவே தமிழக அரசு எடுத்துள்ள சீரிய நடவடிக்கைக்கு எடுத்துக்காட்டு. வரும் காலங்களில் இதனைப் போன்ற வெள்ளத்தால் பாதிப்பு வராத அளவிற்கு நடவடிக்கை எடுப்பதற்காகவே முதலமைச்சர் தினமும் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

எதனால் இந்த வெள்ளம் ஏற்பட்டது என்ற அடிப்படை ஆதாரத்தை கண்டறிந்து முழுமையாக தீர்வு காண முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். தற்போது உள்ள பாதிப்புகள் குறித்தும் மத்திய குழுவிற்கு மாநில அரசு உரிய முறையில் தெரிவிக்கும்’ என்று தெரிவித்தார்.

மழை வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5000 கொடுங்க.. விஜயகாந்த் கோரிக்கை

மழை பாதிப்பு நிவாரண பணிகளை திமுக அரசு சரிவர கையாளவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சூழலில் உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால் மழை வெள்ள பாதிப்பு முக்கிய விளைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் அனைத்து ஊரக உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

அந்த வகையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சிகளில், வார்டு வரையறை பணிகள் நடந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பது, மறைமுக தேர்தல் மூலமாகவே நடைபெறும். அதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள் வாக்களித்து மேயரை தேர்வு செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்கிற நிலையில் அரசியல் கட்சிகள் விருப்பமனுக்களை கட்சி தொண்டர்களிடம் பெற்று வருகின்றன.

First published:

Tags: Elections, Tamilnadu