ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஞாயிறன்று பொங்கல் பரிசு வழங்கப்படுமா? தமிழக அரசு புதிய அறிவிப்பு

ஞாயிறன்று பொங்கல் பரிசு வழங்கப்படுமா? தமிழக அரசு புதிய அறிவிப்பு

Pongal Gift

Pongal Gift

பொங்கல் பரிசுத் தொகுப்பை பெரும் பொதுமக்கள் 21 பொருட்களும் இருக்கிறதா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும். பொருட்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் 18005993540 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் பொங்கல் பரிசு நியாய விலைக்கடைகளில் வழங்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றை மஞ்சள் பையில் வைத்து, முழு கரும்பு ஒன்றும் சேர்த்து பொங்கல் பரிசுத்தொகுப்பாக அனைத்து ரேஷன் கடைகள் மூலம் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் கடந்த திங்கள் முதல் முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

NEET Exam : நீட் தேர்வில் இருந்து விலக்கு... நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம் 

இந்நிலையில் அன்றைய தினம் நியாய விலைக்கடைகள் செயல்படாது என்றும், பொங்கல் பரிசுகள் அன்றைய தினம் வழங்கப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே, நியாய விலை கடைகளில் பரிசு தொகுப்பு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மஞ்சள் பையுடன் 21 வகையான பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், சேலத்தில் பெரும்பாலான கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் மஞ்சள் பை வழங்கப்படவில்லை என்று புகார்கள் கூறப்பட்டன.

ஓ.பி.சி.க்கு 27% இடஒதுக்கீடு; மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வுக்கான தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் முறையாக வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பை பெரும் பொதுமக்கள் 21 பொருட்களும் இருக்கிறதா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும். பொருட்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் 18005993540 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும், துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டுறவு சங்கத்தில் உள்ள அனைவரும் அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்பதால், அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள்.

Also Read : மதுப்பிரியர்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் 4 நாள்கள் டாஸ்மாக் கடை மூடல்

ஏழை எளிய மக்களுக்குக் கொடுக்கப்படும் பொங்கல் பரிசுப் பொருள் தரமானதாக இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். அதன் அடிப்படையிலேயே பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது

அதிமுக ஆட்சியில் உண்மைக்குப் புறம்பான திட்டங்களை தெரிவித்து அது அனைத்தும் நிறைவேற்றப்படாமல் இருந்தது. ஆனால் தற்போதைய ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மட்டுமன்றி சொல்லாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது'' எனக் கூறினார்.

First published:

Tags: Pongal Gift