Home /News /tamil-nadu /

பாஜகவையும் மோடியையும் பார்த்து திமுக பயப்படுகிறது என்பதை ஒப்புகொள்வார்கள்.. டிடிவி தினகரன் கேள்வி

பாஜகவையும் மோடியையும் பார்த்து திமுக பயப்படுகிறது என்பதை ஒப்புகொள்வார்கள்.. டிடிவி தினகரன் கேள்வி

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி இல்லை. விருந்தினராக வருபவருக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை” என்று திமுக கூறியுள்ளதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

    இதற்கு முன்பு பிரதமர் தமிழகம் வந்த நேரத்தில் கறுப்புக்கொடி காட்டியதும், ‘Go Back Modi’ என்றதும் தவறு என இதன்மூலம் இப்போது தி.மு.க ஒப்புக்கொள்கிறதா என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா 2022ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி நடைபெறவுள்ளது.  இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கவுள்ளார்.

    கடந்த அதிமுக ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோதெல்லாம் திமுக சார்பில் கருப்புக்கொடி காட்டப்பட்டது. இதேபோல், Go Back Modi என்றும் சமுக ஊடகங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மோடி எங்களுக்கு எதிரி அல்ல என்றும் கருப்புக்கொடி காட்ட தேவையில்லை என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்,  திடீர் ஞானோதயம் பெற்றிருக்கிற தி.மு.க, “பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி இல்லை. விருந்தினராக வருபவருக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை” என்று கூறியுள்ளதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

    இதையும் படிங்க: மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு: பாமக தீர்மானம்


    எதிர்க்கட்சியாக இருந்தால் ஒன்று ; ஆளுங்கட்சியான பிறகு வேறொன்று என தி.மு.க போடும் இரட்டை வேடங்கள் அம்பலமாகி வருவதற்கு இது இன்னும் ஒரு சாட்சி. இதற்கு முன்பு பிரதமர் தமிழகம் வந்த நேரத்தில் கறுப்புக்கொடி காட்டியதும், ‘Go Back Modi’ என்றதும் தவறு என இதன்மூலம் இப்போது தி.மு.க ஒப்புக்கொள்கிறதா?

    அன்றைக்கு, ‘இதெல்லாம் தேவையில்லாத வேலை’ என்று சொன்ன எங்களைப் போன்றவர்களைப் பார்த்து, ‘பா.ஜ.க.வைக் கண்டு பயப்படுகிறார்கள்’ என்று தி.மு.க.வினரும் அவர்களைச் சார்ந்தவர்களும் விமர்சித்தார்கள். அப்படியென்றால், இப்போது பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் பார்த்து தி.மு.க பயந்து நடுங்குகிறது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் படிங்க: நகைக் கடன் தள்ளுபடி: திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

    Published by:Murugesh M
    First published:

    Tags: DMK, PM Narendra Modi, TTV Dhinakaran

    அடுத்த செய்தி