Home /News /tamil-nadu /

Jallikattu : தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமா?

Jallikattu : தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமா?

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Jallikattu : ஜல்லிக்கட்டில் சீறிவரும் காளைகளை தயார்படுத்துவது ஒருபுறம் இருக்க மறுபுறம் அவற்றை அடக்கும் மாடுபிடி காளையர்களும், பாயச்சலுக்குத் தயாராகி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தமிழர்களின் வாழ்வில் ஒன்றிய வீரவிளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளை தயார்படுத்தும் வகையில் அவற்றுக்கு மண் குத்து, நீச்சல் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய உலகப்புகழ் பெற்ற ஜல்லிகட்டுப் போட்டிகள் மதுரை மாவட்டத்திற்கே உரித்தானவை. வரும் தை மாதம் நடைபெறவுள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக, இப்போதே காளைகளை தயார் படுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. சிவகங்கை மாவட்டம் கட்டிகுளம் பகுதியில், காளைகளுக்கு அவற்றின் உரிமையாளர்கள் பல்வேறு பயிற்சிகளை, அளிக்க தொடங்கி விட்டனர். குறிப்பாக ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி மற்றும் மண் குத்துதல் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

    ஜல்லிக்கட்டு காளைகளுக்கு, உரிய நேரத்திற்கு உணவு, தண்ணீர், தீவனம் போன்றவற்றை தந்து பராமரித்து, ஜல்லிக்கட்டுக்கு தயார்படுத்தி வருகின்றனர். மற்ற நாட்களில் தீவனத்திற்காக செய்யப்படும் செலவை விட, ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காலங்களில் தீவனத்திற்கு, கூடுதலாக இருமடங்கு செலவிடப்படுகிறது. பருத்திக்கொட்டை, தவிடு,பேரீச்சம் பழம் போன்றவற்றை தந்து, தெம்பூட்டி காளைகளை தயார்படுத்தி வருகின்றனர்.

    சீறிவரும் காளைகளை தயார்படுத்துவது ஒருபுறம் இருக்க மறுபுறம் அவற்றை அடக்கும் மாடுபிடி காளையர்களும், பாயச்சலுக்குத் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், ஒமைக்ரான் பரவல் அதிகமானால் ஜல்லிகட்டுப் போட்டிகள் நடப்பது சந்தேகம் தான் என்று, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை ஒட்டி, பாரம்பரியமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு விழா ஏற்பாட்டாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ரகுபதி இவ்வாறு கூறியுள்ளார்.

    செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் ரகுபதியிடம், ஜல்லிக்கட்டு போட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு தடை விதிக்காமல் இருந்தால் ஜல்லிகட்டு போட்டி நடைபெறும் என்றார். ஆனால், தொற்று பரவல் அதிகமானால் கட்டுபாடுகள் விதிக்கும்பட்சத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது சந்தேகம் என கூறினார்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 49ஆம் ஆண்டு அண்ணா விழா ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் பின் செய்தியாளர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஒமைக்கிரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு தடை விதிக்காமல் இருந்தால் ஜல்லிகட்டு போட்டி நடக்கும் என்றும் மாறாக தொற்று பரவுவது அதிகமானால் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டால் ஜல்லிகட்டு நடக்காது என்று கூறினார்.

    Read More : தமிழகத்தில் சிறுவர்களுக்கான தடுப்பூசி முகாம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

    மேலும், நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை . தமிழகத்தில் நீட் தேர்வு விதி விலக்கு பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்தியஅரசு, வெளியுறவு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆளுநரே முடிவு எடுக்கலாம் என கூறி உள்ளது. ஆளுநர் முடிவுக்கு காத்திருக்கிறோம் 2022ல் ஏழு பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

    Read More : 25 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி.. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு - போலீஸார் அதிர்ச்சி

    மேலும், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர் உரிமைக்காக உச்ச நீதி மன்றம் சென்றுள்ளார். தேடுதல் வேட்டை நிறுத்தப்படவில்லை தலைமறைவாக இருக்கும் இடத்தை நெருங்கி விட்டோம் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறினார்.

    Must Read : தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு: மத்திய நிபுணர் குழு இன்று ஆய்வு

    இந்நிலையில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Jallikattu

    அடுத்த செய்தி