• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை...

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை...

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

  • Share this:
    கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால், 3 வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 5ம் தேதி நிறைவடையும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன், இன்று காலை 11 மணியளவில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

    இக்கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டறிகிறார். 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்து மற்றும் மதுபானக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சூழலில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் பொது போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... Petrol Diesel Prices | சென்னையிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது...

    திரையரங்குகளை திறப்பது குறித்தும் முதலமைச்சர் விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாப்பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற விதிமுறை நீட்டிக்கப்படுமா எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: