TN Budget 2021 : மீனவர்கள் கோரிக்கை நிறேவேறுமா?

மீன்பிடி படகுகள்

மீனவர்களுக்கு வழங்கும் டீசலுக்கு அரசு முழு மானியம் வழங்க வேண்டும்

  • Share this:
    புயல் எச்சரிக்கை காலங்களில் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காப்பட்டணம், குளச்சல், முட்டம், சின்னமுட்டம் ஆகிய நான்கு மீன்பிடி துறைமுகங்களை மையமாக கொண்டு 60 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    இந்த மீனவர்கள் வரும் பட்ஜெட்டில் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    குறிப்பாக மீனவர்களுக்கு புயல் கால இழப்பீட்டுத் தொகை வழங்குவது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீனவர்களுக்கு வழங்கும் டீசலுக்கு அரசு முழு மானியம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர். நீரோடி, மார்த்தாண்டம் துறை, சின்னதுறை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கடல் சீற்றத்தினால் வீடுகள் சேதமடைவதை தடுக்க தூண்டில் வளைவுகள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Must Read : பட்ஜெட் குறித்த உடனுக்குடன் அப்டேட்டுக்கு இங்கே கிளிக் செய்க

    புயல் காலங்களில் ஆழ்கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்பதற்காக ஹெலிகாப்டர் தளம் ஒன்று கடலோர பகுதியில் அமைக்க வேண்டும் எனவும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    திமுக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் , அரசுக்கு அதிக அன்னிய செலாவணி மற்றும் உள்நாட்டு வருமானம் ஈட்டி தரும் குமரி மாவட்ட மீனவர்களின் எதிர் பார்ப்பும் கோரிக்கைகளும் நிறைவேறுமா என்று இன்று தெரிந்துவிடும்.
    Published by:Suresh V
    First published: