• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பறுமா? தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பதில்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பறுமா? தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பதில்

வானிலை

வானிலை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறுமா என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.

  • Share this:
    வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரைக்காலுக்கும் - ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையை கடந்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னயைில் வானிமை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 100கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்ட கரையோர பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40-45கி.மீ வேகத்தில் வீசும். அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்.

    வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு.

    தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 54% அதிகம் பொழிந்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 77% அதிகமாக பொழிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தாம்பரத்தில் 23 சென்டி மீட்டரும், சோழவரத்தில் 22 செல்லும் என்று பதிவாகியுள்ளத என்றார். மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற தற்போதைய நிலையில் வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: