12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? 13 சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை!

அமைச்சர் அன்பில் மகேஷ்

அதிமுக சார்பில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, விசிக சார்பில் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட 13 பேர் கலந்துகொள்கின்றனர்.

 • Share this:
  12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து 13 சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் நாளை காணெலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற உள்ளது.

  கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக தொற்று பரவல் சற்று குறைந்துள்ளது. எனினும், உயிரிழப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்த விவாதம் எழுந்துள்ளது. சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்துள்ளது. இதனை உச்ச நீதிமன்றமும் வரவேற்றுள்ளது.

  இந்நிலையில், தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் படிக்கும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளோம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தொடர்ந்து, 12ம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் நாளை காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தப்படும். பின்னர் மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் அடிப்படையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி முடிவை அறிவிப்பார் என்று அவர் கூறினார்.

  இந்நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக நாளை பிற்பகல் 12 மணிக்கு, தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டத்தில், 13 சட்டமன்ற கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

  இதில், அதிமுக சார்பில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, விசிக சார்பில் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட 13 பேர் கலந்துகொள்கின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: