TN Budget 2021 : சென்னை ஓ.எம்.ஆரில் உள்ள 4 டோல்கேட்டை நீக்கும் அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறுமா?

சுங்கச்சாவடி

இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

  • Share this:
    சென்னை, ராஜீவ்காந்தி சாலையில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் மக்கள், இந்த பட்ஜெட்டிலாவது அறிவிப்பு வருமா என எதிர்நோக்கி காத்துள்ளனர்.

    சென்னை, பழைய மாமல்லபுரம் சாலை, 2009ம் ஆண்டு 300 கோடி ரூபாய் செலவில், ஆறுச் வழி சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, ராஜீவ்காந்தி சாலை என பெயர் மாற்றப்பட்டது. இச்சாலையில், துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், சிறுசேரி உள்பட ஐந்து இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை மாநகராட்சி பகுதிக்குள் உள்ள இந்த சுங்கச்சாவடிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், பல நேரங்களில் ஆம்புலன்ஸ் கூட தடைபட்டு நிற்பதாகவும் கூறுகின்றனர் சுங்கச்சாவடியில் பகுதியில் வசித்து வரும் மக்கள்.

    எதிர்கட்சியாக இருந்தபோது, இந்த சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி திமுக போராட்டம் நடத்தியது. தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. , நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். தயாநிதி மாறனும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார்.

    இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சுங்கச்சாவடிகளை கடந்த மாதம் ஆய்வு செய்த நிலையில், அதன்பின் அறிவிப்பு வருமென காத்திருந்த மக்களுக்கு இதுவரை ஏமாற்றமே கிடைத்துள்ளது.

    Must Read : பட்ஜெட் குறித்த உடனுக்குடன் அப்டேட்டுக்கு இங்கே கிளிக் செய்க

    இது தொடர்பாக அமைச்சர் வேலுவிடம் கேட்டபோது, சுங்கச் சாவடியின் வருமானம், பணியாளர்களுக்கான மாத ஊதியம், பராமரிப்பு செலவு உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து, தலைமை செயலரிடம் அறிக்கை வழங்கி உள்ளதாகவும், விரைவில் முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எது எப்படி இருப்பினும், 10 ஆண்டுகளுக்கு மேலான தங்களின் கோரிக்கைக்களுக்கு இந்த பட்ஜெட்டிலாவது விடிவு கிடைத்துவிடாதா என எதிர்பார்த்துள்ளனர் இப்பகுதி மக்கள்.
    Published by:Suresh V
    First published: