Home /News /tamil-nadu /

கழிவுநீர் கால்வாயாக மாறும் தாமிரபரணியை காப்பாற்ற ’சோழர் கால’ தொழில்நுட்பத்தில் ஒரு முயற்சி

கழிவுநீர் கால்வாயாக மாறும் தாமிரபரணியை காப்பாற்ற ’சோழர் கால’ தொழில்நுட்பத்தில் ஒரு முயற்சி

கழிவுநீர் கலந்து ஜீவனை இழந்து தவிக்கும் தாமிரபரணி காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

கழிவுநீர் கலந்து ஜீவனை இழந்து தவிக்கும் தாமிரபரணி காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

கழிவுநீர் கலந்து ஜீவனை இழந்து தவிக்கும் தாமிரபரணி காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளப்படுத்தும் தாமிரபரணி ஆறு நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி அளித்து வருகிறது. இது தற்போது கழிவுநீர் கால்வாய் போல மாறிவிட்ட நிலையில் இதனைத் தடுக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பில் தொடர்ந்து கோரிக்ககைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆகியவற்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகராட்சிப் பகுதி கழிவுநீர் நேரடியாக கலப்பதைத் தடுக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பை மாநகராட்சி நிர்வாகம் அமைத்து வருகிறது.

மாநகர எல்லைக்குள் வண்ணாரப்பேட்டை சிந்துபூந்துறை உடையார்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் 37 லட்சம் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 4 இடங்களில் பணிகள் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில் மற்ற இடங்களிலும் பணிகள் நடந்து வருகின்றன.




படிக்கஇந்தியாவில் ₹ 10 விலையில் கொரோனா உயிர் காக்கும் மருந்து


படிக்கஇந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு









இதன் மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பின் மூலம் இயற்கையான முறையில் சுத்திகரிக்கப்படுவதோடு, அந்த நீர் ஆற்றின் கரைகளில் புதிதாக அமைக்கப்பட உள்ள வெட்டி வேர் கோரப்புல் உள்ளிட்ட செடிகள் வளர்ப்பற்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இப்படியான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் பணிகள் முடிந்த இடங்களிலும் சுத்திகரிப்பு அமைப்பிற்கு அளவுக்கு அதிகமாக கழிவுநீர் வருவதால், அது சுத்திகரிக்கும் தன்மையையே இழந்து, கழிவுநீராகவே நேரடியாக ஆற்றில் கலக்கிறது.

Also see:

 

இது குறித்து ஆணையர் கண்ணன் கூறுகையில், இந்த அமைப்பு பண்டைய சோழர் காலத்தில் நீர்நிலைகளில் கழிவுநீர் கலக்காமல் தடுக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாநகரப் பகுதி முழுவதும் பாதாளச் சாக்கடை திட்டம் கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணி முடிந்ததும் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும் என்றார்.

 
Published by:Rizwan
First published:

Tags: Nellai, Thamirabarani, Tuticorin

அடுத்த செய்தி