Rajinikanth: எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிவைத் தெரிவிக்கிறேன் - ரஜினிகாந்த்
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிவைத் தெரிவிக்கிறேன் என்று தேர்தலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்
- News18 Tamil
- Last Updated: November 30, 2020, 3:36 PM IST
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு புறப்பட்டுச் சென்று, அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விரைவில் தனது முடிவை அறிவிப்பதாக உறுதி அளித்தார்.
மேலும், நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டதாகவும், தனது கருத்தை அவர்களிடம் பகிர்ந்துக்கொண்டதாகவும் தெரிவித்தார். தான் எடுக்கும் எந்த முடிவுக்கும் உடன் இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்திருப்பதால், தனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்குப் பிறகு தொடங்கிய ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. கூட்டத்தில் புதிய கட்சி தொடங்குவது குறித்து நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் பேசியதாகவும் ஜனவரியில் ஆரம்பிக்கலாமா என பரிசீலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் போதிய எழுச்சியுடன் செயல்படவில்லை என மாவட்ட செயலாளர்கள் மீது ரஜினிகாந்த் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக ரஜினி மக்கள் மன்றத்தை வலுப்படுத்த சொல்லி பல மாதங்கள் ஆகியும், நடவடிக்கை எடுக்காததது தொடர்பாக ரஜினிகாந்த் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
பல நிர்வாகிகளை மாற்றிவிடலாமா என்ற நிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறி கடுமையாக ரஜினி எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
மேலும், நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டதாகவும், தனது கருத்தை அவர்களிடம் பகிர்ந்துக்கொண்டதாகவும் தெரிவித்தார். தான் எடுக்கும் எந்த முடிவுக்கும் உடன் இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்திருப்பதால், தனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்குப் பிறகு தொடங்கிய ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது.