• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க அனுமதி வழங்கப்படுமா? எதிர்பார்ப்பில் கைவினைக் கலைஞர்கள்

விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க அனுமதி வழங்கப்படுமா? எதிர்பார்ப்பில் கைவினைக் கலைஞர்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதம் உள்ள நிலையில்,  பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படுமா என கைவினைக் கலைஞர்கள் மத்தியில்  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  • Share this:
    விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதம் உள்ள நிலையில்,  பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படுமா என கைவினைக் கலைஞர்கள் மத்தியில்  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி வருடம் தோறும் செப்டம்பர் மாதம்  வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். இந்த வருடம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் வீடுகளிலும், தெருக்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வது வழக்கம். இதற்காக ஐந்திலிருந்து 20 அடி உயரத்திற்கு மேல் பெரிய சிலைகள் செய்பவர்கள் தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு  செய்ய அரசு தடை விதித்திருந்தது. இதனால்  வட்டிக்கு கடன் வாங்கி பெரிய விநாயகர் சிலைகளை காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வாங்கி விற்பனை செய்ய முடியாமல் கைவினைக் கலைஞர்கள் சிரமப்பட்டனர். அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு பெரிய நஷ்டம் ஏற்பட்டது.

    திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கொண்டையன் பேட்டை, திருவானைக்காவல், சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கைவினை கலைஞர்கள் விநாயகர் சிலை செய்யும் தொழிலை மட்டுமே நம்பி பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர்.

    இதையும் படிக்க: அதளபாதாள சரிவிலிருந்து தமிழகத்தை மீட்கும் வலிமை திமுக அரசுக்கு உண்டு: திருமாவளவன்!


    கடந்த வருடம் கொரோனாவால் விநாயகர் சதுர்த்தியன்று சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டதால்   100 குடும்பங்களை சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் தலா 5 லிருந்து 10 லட்ச ரூபாய் வரை சிலைகளை வாங்கி அதனை விற்க முடியாமல்  தற்போது வரை பாதுகாப்பாக வைத்து வருகின்றனர். மேலும் மழைக்காலம் என்பதால் சிலைகளை பாதுகாப்பாக வைப்பது மட்டுமில்லாமல் வாங்கிய சிலைகளுக்கு வட்டியை மட்டுமே தற்போது வரை செலுத்தி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

    மேலும் படிக்க: குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி: 3வது அலையால் கோவைக்கு பாதிப்பு!


    இந்த ஆண்டும் கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்காத நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு பெரிய சிலைகளை வைக்க அனுமதி வழங்காவிட்டாலும் 5 அடி உயரத்துக்கு குறைவாக உள்ள சிலைகளை வைப்பதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பது கைவினைக் கலைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  அவ்வாறு அனுமதி அளிப்பாத பட்சத்தில் வாங்கிய கடனுக்கு வட்டியைக் கூட செலுத்த முடியாமல் தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    செய்தியாளர்: கதிரவன் - திருச்சி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: