தமிழகத்தை இரண்டாக பிரிக்க திட்டமா? மத்திய அரசு பதில்!

மத்திய அரசு பதில்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொங்குநாடு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் இன்று எதிரொலித்தது.

 • Share this:
  தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா என நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்துறை இணையமைச்சர்  நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

  சமீபத்தில்  மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டபோது,  தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகனை கொங்கு நாட்டை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழகத்தை இரண்டாக பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக  சர்ச்சை எழுந்தது. கோவை, நாமக்கல், ஈரோடு போன்ற பகுதிகளை உள்ளடக்கிய கொங்கு நாடு எனப்படும் புதிய மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என ஒருசிலர் கருத்து தெரிவித்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  இந்த விவகாரம் தமிழக அரசியலில் பேசுபொருளான நிலையில், இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் திமுக எம்.பி.க்கள் ராமலிங்கம் மற்றும் பாரிவேந்தர் ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

   இதையும் படிங்க: விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ₹2000.. மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்..


  இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், புதிய மாநிலங்களை உருவாக்கக்கோரி மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

  எனினும் புதிய மாநிலங்களை உருவாக்குவது என்பது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு நேரடி தொடர்புடையது என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர், அனைத்துத்தரப்பு காரணங்களையும் ஆராய்ந்தபின்னரே மாநிலங்கள் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார். தற்போதைக்கு தமிழகத்தை பிரித்து புதிய மாநிலத்தை உருவாக்கும் எந்த முன்மொழிவும் மத்திய அரசிடம் பரிசீலனையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க: ரேஷன் அட்டையில் பெண்களை குடும்ப தலைவியாக மாற்றினால்தான் பணம் கிடைக்குமா? அமைச்சர் கொடுத்த அப்டேட்!

  Published by:Murugesh M
  First published: